சூப்பர்ஸ்டார் சர்ச்சை முதல் காக்கா - கழுகு கதை வரை.. 2023ல் முற்றிய ரஜினி vs விஜய் மோதல்!
சென்னை: கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், விக்ரம் படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு ரஜினி மற்றும் விஜய் படங்கள் வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், அதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுவதை விட்டு விட்டு அதிகளவில் சண்டை போட்டே 2023ம் ஆண்டு நெகட்டிவிட்டியை அதிகளவில் பரப்பி வந்தனர்.
வாரிசு படத்தில் ஆரம்பித்த சண்டை லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் “இந்த காக்கா.. கழுகு” என சொல்லிவிட்டு ஒரு நிமிடம் கேப் விட்டு ரசிகர்களை சிரிக்க விட்டு அவரும் சிரித்து மறுபடியும் பேசியதை பார்த்து மீண்டும் வெடிக்கத் தொடங்கியது.

பட்டத்தை பறிக்க: நடிகர் ரஜினிகாந்தை தாண்டி புதிய ஸ்டைலை செய்து நடிகர் தமிழ் சினிமாவில் தங்கள் தனித்துவத்தை காட்டாமல் ஹீரோக்களாக வரும் பலரும் ரஜினிகாந்தை காப்பியடித்தே அவரது ஸ்டைலை மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் லிட்டில் சூப்பர்ஸ்டார், யங் சூப்பர்ஸ்டார், நாளைய சூப்பர்ஸ்டார், நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார் என பட்டத்தை பறிக்க நூறு பேர் போட்டி போட்டு வருவதாக ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலிலேயே வைத்து தனது மனக்குறையை ரஜினிகாந்த் கொட்டித் தீர்த்து விட்டார்.
சூப்பர்ஸ்டார் பட்டம்: அதிலும், இந்த ஆண்டு வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என சொன்னதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் சிரித்து சந்தோஷமாக இருந்ததை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர். அந்த பிரச்சனை இந்த ஆண்டு சமூக வலைதளத்தில் ரஜினி ரசிகர்கள் vs விஜய் ரசிகர்கள் சண்டையாக மாறியது.
காணாமல் போன அஜித்: பொங்கலுக்கு துணிவு படம் ரிலீஸ் ஆகும் வரை நடிகர் அஜித் டிரெண்டிங்கில் இருந்து வந்த நிலையில், அந்த படத்திற்கு பிறகு விடாமுயற்சி படம் எப்போது ஆரம்பிக்கும் என்றே தெரியாத நிலையில், ஜெயிலர் மற்றும் லியோவின் அப்டேட்கள் மற்றும் ரசிகர்கள் சண்டையால் அஜித் காணாமலே போய் விட்டார். அஜித் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்துக் கொண்டு விஜய் ரசிகர்களை கடுமையாக தாக்கி வந்தனர். சோஷியல் மீடியாவில் ஏன் இவ்ளோ கோபத்தைக் காட்டுறீங்க என விஜய் பேசும் அளவுக்கு இந்த சண்டை இந்த ஆண்டு வெடித்தது.
காக்கா - கழுகு சண்டை: ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் காக்கா - கழுகு கதையை சொன்ன ரஜினிகாந்த், உடனடியாக நான் இதை யாரையும் குறிப்பிட்டு சொல்லல என நீங்க ஏதாவது கோர்த்து விட்டுடாதீங்க என கொளுத்திப் போட்டது ரசிகர்கள் சண்டையாக கொழுந்து விட்டு எரிந்தது. இரு நடிகர்களும் போட்டா போட்டி போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு பாக்ஸ் ஆபிஸை ஜம்முன்னு வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டி விட்டனர்.
அடுத்த ஆண்டு எப்படி?: நடிகர் ரஜினிகாந்த் கேமியோவாக நடிக்கும் லால் சலாம், மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும் தலைவர் 170 மற்றும் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 171 என 3 படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68, அஜித்தின் விடாமுயற்சி கமல்ஹாசனின் இந்தியன் 2, எச். வினோத் படம், சூர்யாவின் கங்குவா என பிரம்மாண்ட மோதல் நடைபெற உள்ள நிலையில், ஆல் டைம் இண்டஸ்ட்ரி ஹிட் யார் அடிக்கப் போறாங்கன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











