Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தில்லு முல்லு ரீமேக் குழுவுக்கு ரஜினி - கமல் வாழ்த்து!
வேந்தர் மூவீஸ் தயாரிக்க, வீராப்பு படத்தை இயக்கிய பத்ரி இயக்க, 'சென்னை 28' சிவா - இஷா தல்வார் நடிக்கும் படம் இது. தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பார் என்று தெரிகிறது. சவுகார் ஜானகி வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார். பிரபல காமெடி நடிகர் பிரமானந்தம் முக்கிய வேடமேற்றுள்ளார்.
இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன்ஷங்கர் ராஜா இருவரும் முதன் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள்.
படம் தொடங்கும் முன், தில்லுமுல்லுவின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் படத்தின் இயக்குநர் பத்ரியும், ஹீரோவாக நடிக்கும் சிவாவும்.
படத்தின் ஒரிஜினல் இயக்குநர் கே பாலச்சந்தர், உலகநாயகன் கமல் ஹாஸன் ஆகியோரும் இந்த ரீமேக் குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தில்லுமுல்லுவில் கமல் ஹாஸன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.