சுறா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு?

சேத்பட் ஹாரிங்டன் சாலையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடக்கும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் - தமன்னா, வடிவேலுவுடன் திரையுலக பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள்.
பாடல்களை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.
சன் தொலைக்காட்சிக்காக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுறா படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்றைய விழாவில் அறிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











