மல்டிஸ்டார் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் சூர்யா.. ரோலக்ஸ் கதாபாத்திரம் ஏற்படுத்திய பாதிப்பா?

சென்னை: நேருக்கு நேர் படத்தில் தொடங்கி எதற்கும் துணிந்தவன், விக்ரம் என்று தற்போது வரை முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா.

பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ஃபிரண்ட்ஸ், நந்தா என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் சூர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஒரு நடிகனாக தனக்கு இருக்கும் ஆசையை தற்போது வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

வித்யாசமான கதாபாத்திரம்

வித்யாசமான கதாபாத்திரம்

நந்தா, பிதாமகன், பேரழகன் போன்ற பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெற்றி பெற்றவர் சூர்யா.ஹேண்ட்சம் ஆக மட்டுமே இல்லாமல் வித்யாசமான கேரக்டர்களில் நடித்து வரும் நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். ஒவ்வொரு படத்திற்கும் மாற்றத்தை எதிர்பார்க்கும் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்பவர் நடிகர் சூர்யா என்று சொன்னால் அது மிகையாகாது.

ஸ்டைலிஷ் ஹீரோ சூர்யா

ஸ்டைலிஷ் ஹீரோ சூர்யா

காக்க காக்க, மௌனம் பேசியதே, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், ஆதவன், சிங்கம் போன்ற படங்களில் ஹாண்ட்சம் நாயகனாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இவர் நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளி குவித்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மல்டிஸ்டார் படங்கள்

மல்டிஸ்டார் படங்கள்

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யாவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சிங்கிள் ஹீரோ சப்ஜெக்ட்டை விட தனக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பது பிடித்திருக்கிறது என்ற தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் சூர்யா. ஏற்கனவே பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா, அதேபோல் ஆய்த எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த்துடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா.

மாற்றத்தை கொடுத்த ரோலக்ஸ்

மாற்றத்தை கொடுத்த ரோலக்ஸ்

சமீபத்தில் விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மிகப் பெரிய அளவு ரீச் கிடைத்தது. சிங்கிள் ஹீரோ படங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. பல திறமையான நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடித்தால் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கும், ஃபிலிம் மேக்கிங் என்பதை என்ஜாய் செய்ய வேண்டும். பல முன்னணி நடிகர்கள் ஒன்று சேர்ந்து நடிக்கும் பொழுது படத்திற்கான பலமும் எதிர்பார்ப்பும் கூடும், மல்டி ஸ்டார் படங்கள் நடிப்பதில் தனக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X