சிங்கத்துக்கு இன்று ஹேப்பி பர்த்டே!
சென்னை: நடிகர் சூர்யா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான சிங்கம் 2 படம் நல்ல வசூலை தந்துள்ளது. படத்தை பார்த்தவர்கள் சூர்யா படத்தை தன் தோளில் தாங்குகிறார் என்று தெரிவித்தனர்.
அடுத்ததாக அவர் கௌதம் மேனின் துருவ நட்சத்திரம் படத்திலும், லிங்குசாமியின் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கிறார்.

38வது பிறந்தநாள்
சூர்யா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

துருவ நட்சத்திரம் உண்டா?
துருவ நட்சத்திரம் படத்திற்கு இன்னும் ஹீரோயின் கிடைத்தபாடில்லை. இந்நேரம் ஷூட்டிங் துவங்கியிருக்க வேண்டியது. ஆனால் எப்பொழுது துவங்கும் என்றே தற்போது தெரியவில்லை.

26ம் தேதி இந்தி சிங்கம் 2 ரிலீஸ்
சிங்கம் 2 படம் இந்தியில் மெய்ன் ஹூன் சூர்யா சிங்கம் 2 என்ற பெயரில் வரும் 26ம் தேதி வட இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது.

தயாரிப்பாளர்
இத்தனை நாட்களாக நடிகராக மட்டுமே இருந்த சூர்யா 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











