»   »  கமல், சூர்யா படங்களுக்கு தடை?

கமல், சூர்யா படங்களுக்கு தடை?

Subscribe to Oneindia Tamil

தியேட்டர் உரிமையாளர்களின் தடையை மீறி போக்கிரி படத்தை திரையிட்ட ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றுதிரைப்பட உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் ஆஸ்கர் பிலிம்ஸ்சம்பந்தப்பட்டுள்ள கமலின் தசாவதாரம், சூர்யாவின் வாரணம் ஆயிரம், அர்ஜூனின் மருதமலை ஆகிய படங்களுக்கு தடை விதிக்கப்படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.

விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஆதி. இப்படம் வசூல் ரீதியாகவும், ரசனை ரீதியாகவும் படு தோல்வி அடைந்தது. இப்படத்தைத்திரையிட்டதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என்று சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோரது படங்களுக்கு ஒத்துழைப்புகொடுப்பதில்லை, படங்களைத் திரையிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மத்தியஸ்தம் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில்,போக்கிரி படத்தின் உரிமையை வாங்கியிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அப்படத்தை மேற்கண்ட மூன்று மாவட்டங்களிலும் வெளியிட்டார்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுப்பாகி விட்டனர். இதைத் தொடர்ந்து ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லைஎன்ற முடிவை எடுத்துள்ளனர். ரவிச்சந்திரன் தற்போது தயாரித்து வரும் தசாவதாரம், சூர்யா நடிக்கும் வாரணம் ஆயிரம், அர்ஜூன் நடிக்கும்மருதமலை, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல படங்களுக்கும் தடை விதிக்கப்பட உள்ளது.

மேலும், அவர் பல படங்களின் விநியோக உரிமையையும் எடுத்துள்ளார். அந்தப் படங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் தியேட்டர்உரிமையாளர்களின் இந்த முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரவிச்சந்திரனுக்கு ஆதரவாகஅவை குரல் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால் தமிழ்த் திரையுலகில் விஜய்யை மையமாக வைத்து புதிய மோதல் வெடிக்கவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil