»   »  சில்லுன்னு மாறிய ஜில்லு! சூர்யா, ஜோதிகாவின் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பெயர் சில்லுன்னு ஒரு காதல்என மாறி விட்டது.தமிழில் படப் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தாலும் அறிவித்தார், ஏராளமான தமிழ்ப் படங்களின் குண்டக்க மண்டக்கபெயர்கள் தமிழுக்கு மாறத் தொடங்கி விட்டன.தமிழிலேயே படப் பெயர்களை வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கடுமையாகமிரட்டியும், போராடியும் பார்த்தார். ஆனால், தமிழ் சினிமாக்காரர்கள் அதைகண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஓரிரு படங்களின் பெயர்கள் மட்டும்மாற்றப்பட்டன.ஆனால் பிறகு பயம் தெளிந்து தாறுமாறாக பெயர் வைக்க ஆரம்பித்து விட்டனர்.இப்போது திமுக அரசின் அறிவிப்பால், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் தங்களதுபடங்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் பெயரைஉனக்கும், எனக்கும் என்று மாற்றி விட்டனர். இருந்தாலும், சம்திங் சம்திங்கையும்டைட்டிலுக்கு கீழே அப்படியே வைத்துள்ளனர். கேட்டால் அது பஞ்ச் லைனாம்!

சில்லுன்னு மாறிய ஜில்லு! சூர்யா, ஜோதிகாவின் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பெயர் சில்லுன்னு ஒரு காதல்என மாறி விட்டது.தமிழில் படப் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தாலும் அறிவித்தார், ஏராளமான தமிழ்ப் படங்களின் குண்டக்க மண்டக்கபெயர்கள் தமிழுக்கு மாறத் தொடங்கி விட்டன.தமிழிலேயே படப் பெயர்களை வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கடுமையாகமிரட்டியும், போராடியும் பார்த்தார். ஆனால், தமிழ் சினிமாக்காரர்கள் அதைகண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஓரிரு படங்களின் பெயர்கள் மட்டும்மாற்றப்பட்டன.ஆனால் பிறகு பயம் தெளிந்து தாறுமாறாக பெயர் வைக்க ஆரம்பித்து விட்டனர்.இப்போது திமுக அரசின் அறிவிப்பால், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் தங்களதுபடங்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் பெயரைஉனக்கும், எனக்கும் என்று மாற்றி விட்டனர். இருந்தாலும், சம்திங் சம்திங்கையும்டைட்டிலுக்கு கீழே அப்படியே வைத்துள்ளனர். கேட்டால் அது பஞ்ச் லைனாம்!

Subscribe to Oneindia Tamil
சூர்யா, ஜோதிகாவின் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பெயர் சில்லுன்னு ஒரு காதல்என மாறி விட்டது.

தமிழில் படப் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து என்று முதல்வர் கருணாநிதிஅறிவித்தாலும் அறிவித்தார், ஏராளமான தமிழ்ப் படங்களின் குண்டக்க மண்டக்கபெயர்கள் தமிழுக்கு மாறத் தொடங்கி விட்டன.

தமிழிலேயே படப் பெயர்களை வைக்க வேண்டும் என்று ராமதாஸ் கடுமையாகமிரட்டியும், போராடியும் பார்த்தார். ஆனால், தமிழ் சினிமாக்காரர்கள் அதைகண்டுகொள்ளவே இல்லை. ஒப்புக்கு ஓரிரு படங்களின் பெயர்கள் மட்டும்மாற்றப்பட்டன.

ஆனால் பிறகு பயம் தெளிந்து தாறுமாறாக பெயர் வைக்க ஆரம்பித்து விட்டனர்.இப்போது திமுக அரசின் அறிவிப்பால், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் தங்களதுபடங்களுக்கு வைத்த ஆங்கிலப் பெயர்களை தமிழுக்கு மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தின் பெயரைஉனக்கும், எனக்கும் என்று மாற்றி விட்டனர். இருந்தாலும், சம்திங் சம்திங்கையும்டைட்டிலுக்கு கீழே அப்படியே வைத்துள்ளனர். கேட்டால் அது பஞ்ச் லைனாம்!

இதேபோல சூர்யா, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ஜில்லென்று ஒரு காதல்படத்தின் பெயரும் மாறி விட்டது. இப்போது அது சில்லுன்னு ஒரு காதல். ஜில்லென்றுஎன்ற வார்த்தை ஆங்கிலம் இல்லையே என்று கேட்டால், ஜி என்ற வார்த்தை வடமொழிச்சொல் ஆயிற்றே.

இந்தக் காரணத்திற்காக கேளிக்கை வரியிலிருந்து விலக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது, அதனால்தான் சில்லுன்னு மாற்றி விட்டோம் என்கிறதுதயாரிப்பு வட்டாராம்.

பெயர்களை மாற்றுவதோடு இல்லாமல், அப்படியே நல்ல வசனங்களைக் கொடுத்துஹீரோக்களையும், ஹீரோயின்களையும் பேச விடுவது ரொம்ப நல்லது.இல்லாவிட்டால் டுபுக்கு, கொக்கரக்கோ கும்மாங்கோ, கொய்யானே போன்றவார்த்தைகளை தமிழ் வார்த்தைகள் என்று சின்னக் குழந்தைகள் நினைக்க ஆரம்பித்துவிடும்!


Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil