»   »  சில்லுன்னு காதலுக்கு யு/

சில்லுன்னு காதலுக்கு யு/

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாப்ளே சூர்யா, மணப் பெண் ஜோதிகா இணைந்து நடித்துள்ள சில்லுன்னு ஒரு காதல்படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாம்.

சூர்யாவின் மறைமுகத் தயாரிப்பான சில்லுன்னு ஒரு காதல் படம் முடிந்து நாளைதிரைக்கு வருகிறது. இதில் சூர்யாவுடன் ஜோடியாக ஜோதிகாவும் பாப்பா பூமிகாவும்நடித்துள்ளனர்.

சூர்யா-ஜோதிகா 11ம் தேதி கல்யாணம் செய்து கொள்ளப் போகும் நிலையில்கல்யாணப் பரிசாக இந்தப் படத்தை ரசிகர்களுக்கு படைத்துள்ளனர். இருவரும்இணைந்து நடித்துள்ள கடைசிப் படமும் இதுதானாம். இனி ஜோ நடிக்க மாட்டாராம்.

இப்படத்தை தணிக்கை சான்றிதழுக்காக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினர்.தணிக்கை குழுவினர் படத்தைப் பார்த்தபோது சூர்யா, இயக்குனர் கிருஷ்ணா,தயாரிப்பாளர் ஞானவேல் (சூர்யா குடும்பத்துக்கு சொந்தக்காரர்) ஆகியோரும் உடன்இருந்தனர்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதாவது சூர்யாவும், ஜோதிகாவும் தங்களதுகுழந்தையை தூங்க வைத்து விட்டு நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி அது.

இந்தக் காட்சியைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் இது மிகவும் செக்ஸியாகஇருக்கிறதே, இதை இப்படியே அனுமதிக்க முடியாதே என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ந்த சூர்யா, அவ்வளவு ஆபாசமாக இது இல்லை. இயற்கையானகாட்சிதான் என்று தணிக்கைக் குழுவினருக்கு சாந்தமாக விளக்கியுள்ளார்(எஸ்.ஜே.சூர்யவார இருந்தால் செல்போனை தூக்கி வீசி ஆர்ப்பாட்டம்பண்ணியிருப்பார்)

ஆனாலும் தணிக்கைக் குழுவினர் ஒத்துக் கொள்ளவில்லையாம். அந்தக் காட்சியைஎடுத்துவிட்டால் படத்திற்கு யு (எல்லோரும் பார்க்கலாம்) சர்டிபிகேட் தருகிறோம்.இல்லாவிட்டால் யுஏ தான் தர முடியும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஏ சர்டிபிகேட் கிடைத்தாலும் பரவாயில்லை, காட்சியை எடுக்க முடியாதுஎன்று சூர்யாவும், கிருஷ்ணாவும் கூறி விட்டதால் படத்திற்கு யுஏ சர்டிபிகேட்கிடைத்ததாம்.

மொத்தத்தில் படம் மிக அருமையாக வந்திருக்கிறதாம, குறிப்பாக ரஹ்மானின்இசையில் பாடல்கள் மிக பிரமாண்டமாய் மிக வித்தியமாய் வந்துள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil