»   »  ஜோ-சூர்யா தலை தீபாவளி

ஜோ-சூர்யா தலை தீபாவளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகில் சூர்யா, ஜோதிகாவுக்கு இது தலை தீபாவளி. ஸோ, படு ஹேப்பியாககொண்டாடக் காத்திருக்கிறது உலக் தமிழர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்தஇந்த பரபரப்பு ஜோடி.

படங்களில் வரும் காதலையும் மிஞ்சிய பரபரப்பும், படபடப்பும், கிளைமாக்ஸும்நிறைந்ததுதான் ஜோ- சூர்யா காதல் கதை. ஜில்லென்ற காதலாக மட்டும் இல்லாமல்ஜிலீர் திருப்பங்களும் நிறைவே இருந்ததால் சேருவார்களா, மாட்டார்களா என்றுஅத்தனை தமிழர்களையும் அங்கலாய்க்க வைத்து விட்டது இந்த மேட் ஃபார் ஈச் அதர்ஜோடி.

சினிமாவைப் போலவே இந்த காதலர்களும் கடைசியில் ஒன்று சேர்ந்தபோதுஅப்பாடா என்று நிம்மதியடைந்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். இந்த அளவுக்கு ஒருசினிமா நடிகர், நடிகையின் காதல் இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்றுதெரியவில்லை.

காதல் கல்யாணத்தில் முடிந்து, தேனிலவையும் கொண்டாடி முடித்து அம்சமாககுடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் சூர்யாவும், ஜோதிகாவும் தலை தீபாவளியைஅட்டகாசமாக கொண்டாட காத்திருக்கிறார்கள்.

தலை தீபாவளி ஜோடிக்கு சந்தோஷமாக வாழ்த்துச் சொல்வோம். அடுத்ததீபாவளியை குட்டிப் பாப்பாவுடன் கொண்டாட அட்வான்ஸ் வாழ்த்தையும் சேர்த்துசொல்வோம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil