பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்க்கான கதையில் நடிக்கும் சூர்யா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள் தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சுவாரசியமான பல்வேறு தகவல்களை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், நடிகர் விக்ரமை வைத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்தப்படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை தொடர்ந்து சூரரைப்போற்று படத்தையும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய அமேஸான் தளம் கேட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குநர் பாண்டிராஜ் நடிகர் விஜய்க்கு சொன்ன கதையில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார் பிகே. அதோடு அவள் அப்படித்தான் திரைப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பது, மிஷ்கின் படத்தில் சிம்பு போலீஸாக நடிக்க இருப்பது உள்ளிட்ட தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











