»   »  தெலுங்கில் சூர்யா விக்ரமைப் போலவே தெலுங்கில் காலடி எடுத்து வைக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளார்.விக்ரம் நடித்த ஆக்ஷன் படங்களுக்கும், பிதாமகன், காசி போன்ற படங்களுக்கும் தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்நியன் தெலுங்கில் வசூலில் புதிய சாதனை படைத்துவிட்டது. பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களின்படங்களை ஓரம்கட்டியது அந்நியன்.இதையடுத்து நேரடியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விக்ரம்.அதே போல சூர்யாவுக்கும் அங்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. காக்க.. காக்க படத்தின் மூலம் சூர்யா அங்கு பெரும்பிரபலமாகிவிடடார். அந்தப் படத்தை நடிகர் வெங்கடேஷை வைத்து தாணுவே தெலுங்கில் தயாரித்தார். ஆனால், அதுஅவ்வளவாக ஓடவில்லை. அதே நேரத்தில் சூர்யா நடித்த காக்க காக்க..வை டப் செய்து வெளியிட்டபோது வசூல் குவிந்தது.இந் நிலையில் இப்போது கஜினி படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் சக்கைபோடு போட்டு வருகிறது.தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. இதையடுத்து இயக்குனர்முருகதாசுடன் ஹைதராபாத் வந்த சூர்யா அங்கு ஒரு திரையரங்கில் கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்த்தார்.அங்கு சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூர்யாவை மொய்த்துவிட்டனர். இதன் பின்நிருபர்களைச் சந்தித்தார் சூர்யா. அவரது பேட்டி விவரம்:தமிழில் நான் நடித்த கஜினி படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் ரசிகர்களுடன் ரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து படம்பார்ப்பதற்காகவே வந்தேன்.தியேட்டரில் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கொடுத்த வரவேற்பு மிக ஆச்சரியமாக இருந்தது. இதைகனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.கஜினி பட வெற்றி தனிப்பட்ட நபருடையது அல்ல. படத்தின் ஒட்டுமொத்தக் குழுவுக்கு கிடைத்த வெற்றி.டைரக்டர் முருகதாஸ் நினைத்தபடி படம் உருவானது. தெலுங்கில் கஜினிக்கு கிடைத்த வெற்றியை நேரில்காண்பதற்காக வந்தேன்.எனக்கு திருப்பு முனையாக காக்க காக்க, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் அமைந்தன. ஒவ்வொருவெற்றிப்படமும் எனக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.எனது அடுத்த படம் ஆறு. இதில் எனக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.ஜோதிகாவுடன் நடிக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் படப்பிடிப்பின் சில காட்சிகள் ராஜமுந்திரியில் நடத்தஇருக்கிறோம். இந்தப் படத்தை என் உறவினர் ஒருவர் தான் தயாரிக்கிறார்.ஜோவுடன் திருமணம்:தெலுங்குப் படங்களில் நேரடியாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கவும் நான் ரெடி. ஆனால், எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாது.அதை இப்போது கற்று வருகிறேன் என்றார் சூர்யா.இதையடுத்து எல்லா நிருபர்களுமே ஜோதிகாவை நீங்கள் திருமணம் செய்யப் போவது உண்மைதானே என்றுகேட்க, நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு சிரித்தார் சூர்யா.ஆனால், உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று அவரை தொடர்ந்து நிருபர்கள் குடைந்ததால்சிரித்தபடியே, நடக்கும். அடுத்த ஆண்டு கூட அது நடக்கலாம் என்றார்.கஜினி படத்தை பார்த்துவிட்டு சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டுக்கு ஒரு மலர்க் கொத்தை அனுப்பினாராம்தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. தொடர்ந்து அவரது போன் காலும் வந்ததாம். சூர்யாவை ஏகத்துக்கும் பாராட்டித்தள்ளிவிட்டாராம் சிரஞ்சீவி.

தெலுங்கில் சூர்யா விக்ரமைப் போலவே தெலுங்கில் காலடி எடுத்து வைக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளார்.விக்ரம் நடித்த ஆக்ஷன் படங்களுக்கும், பிதாமகன், காசி போன்ற படங்களுக்கும் தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்நியன் தெலுங்கில் வசூலில் புதிய சாதனை படைத்துவிட்டது. பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களின்படங்களை ஓரம்கட்டியது அந்நியன்.இதையடுத்து நேரடியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விக்ரம்.அதே போல சூர்யாவுக்கும் அங்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. காக்க.. காக்க படத்தின் மூலம் சூர்யா அங்கு பெரும்பிரபலமாகிவிடடார். அந்தப் படத்தை நடிகர் வெங்கடேஷை வைத்து தாணுவே தெலுங்கில் தயாரித்தார். ஆனால், அதுஅவ்வளவாக ஓடவில்லை. அதே நேரத்தில் சூர்யா நடித்த காக்க காக்க..வை டப் செய்து வெளியிட்டபோது வசூல் குவிந்தது.இந் நிலையில் இப்போது கஜினி படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் சக்கைபோடு போட்டு வருகிறது.தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. இதையடுத்து இயக்குனர்முருகதாசுடன் ஹைதராபாத் வந்த சூர்யா அங்கு ஒரு திரையரங்கில் கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்த்தார்.அங்கு சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூர்யாவை மொய்த்துவிட்டனர். இதன் பின்நிருபர்களைச் சந்தித்தார் சூர்யா. அவரது பேட்டி விவரம்:தமிழில் நான் நடித்த கஜினி படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் ரசிகர்களுடன் ரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து படம்பார்ப்பதற்காகவே வந்தேன்.தியேட்டரில் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கொடுத்த வரவேற்பு மிக ஆச்சரியமாக இருந்தது. இதைகனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.கஜினி பட வெற்றி தனிப்பட்ட நபருடையது அல்ல. படத்தின் ஒட்டுமொத்தக் குழுவுக்கு கிடைத்த வெற்றி.டைரக்டர் முருகதாஸ் நினைத்தபடி படம் உருவானது. தெலுங்கில் கஜினிக்கு கிடைத்த வெற்றியை நேரில்காண்பதற்காக வந்தேன்.எனக்கு திருப்பு முனையாக காக்க காக்க, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் அமைந்தன. ஒவ்வொருவெற்றிப்படமும் எனக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.எனது அடுத்த படம் ஆறு. இதில் எனக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.ஜோதிகாவுடன் நடிக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் படப்பிடிப்பின் சில காட்சிகள் ராஜமுந்திரியில் நடத்தஇருக்கிறோம். இந்தப் படத்தை என் உறவினர் ஒருவர் தான் தயாரிக்கிறார்.ஜோவுடன் திருமணம்:தெலுங்குப் படங்களில் நேரடியாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கவும் நான் ரெடி. ஆனால், எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாது.அதை இப்போது கற்று வருகிறேன் என்றார் சூர்யா.இதையடுத்து எல்லா நிருபர்களுமே ஜோதிகாவை நீங்கள் திருமணம் செய்யப் போவது உண்மைதானே என்றுகேட்க, நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு சிரித்தார் சூர்யா.ஆனால், உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று அவரை தொடர்ந்து நிருபர்கள் குடைந்ததால்சிரித்தபடியே, நடக்கும். அடுத்த ஆண்டு கூட அது நடக்கலாம் என்றார்.கஜினி படத்தை பார்த்துவிட்டு சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டுக்கு ஒரு மலர்க் கொத்தை அனுப்பினாராம்தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. தொடர்ந்து அவரது போன் காலும் வந்ததாம். சூர்யாவை ஏகத்துக்கும் பாராட்டித்தள்ளிவிட்டாராம் சிரஞ்சீவி.

Subscribe to Oneindia Tamil

விக்ரமைப் போலவே தெலுங்கில் காலடி எடுத்து வைக்க சூர்யாவும் முடிவு செய்துள்ளார்.

விக்ரம் நடித்த ஆக்ஷன் படங்களுக்கும், பிதாமகன், காசி போன்ற படங்களுக்கும் தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்நியன் தெலுங்கில் வசூலில் புதிய சாதனை படைத்துவிட்டது. பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களின்படங்களை ஓரம்கட்டியது அந்நியன்.

இதையடுத்து நேரடியாக தெலுங்குப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விக்ரம்.

அதே போல சூர்யாவுக்கும் அங்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. காக்க.. காக்க படத்தின் மூலம் சூர்யா அங்கு பெரும்பிரபலமாகிவிடடார். அந்தப் படத்தை நடிகர் வெங்கடேஷை வைத்து தாணுவே தெலுங்கில் தயாரித்தார். ஆனால், அதுஅவ்வளவாக ஓடவில்லை. அதே நேரத்தில் சூர்யா நடித்த காக்க காக்க..வை டப் செய்து வெளியிட்டபோது வசூல் குவிந்தது.


இந் நிலையில் இப்போது கஜினி படம் தமிழைப் போலவே தெலுங்கிலும் சக்கைபோடு போட்டு வருகிறது.

தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பெரும் கூட்டம் கூடுகிறது. இதையடுத்து இயக்குனர்முருகதாசுடன் ஹைதராபாத் வந்த சூர்யா அங்கு ஒரு திரையரங்கில் கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்த்தார்.

அங்கு சூர்யாவை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் சூர்யாவை மொய்த்துவிட்டனர். இதன் பின்நிருபர்களைச் சந்தித்தார் சூர்யா. அவரது பேட்டி விவரம்:

தமிழில் நான் நடித்த கஜினி படம் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் ரசிகர்களுடன் ரசிகராக தியேட்டரில் உட்கார்ந்து படம்பார்ப்பதற்காகவே வந்தேன்.

தியேட்டரில் ரசிகர்கள் படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கொடுத்த வரவேற்பு மிக ஆச்சரியமாக இருந்தது. இதைகனவிலும் கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.


கஜினி பட வெற்றி தனிப்பட்ட நபருடையது அல்ல. படத்தின் ஒட்டுமொத்தக் குழுவுக்கு கிடைத்த வெற்றி.

டைரக்டர் முருகதாஸ் நினைத்தபடி படம் உருவானது. தெலுங்கில் கஜினிக்கு கிடைத்த வெற்றியை நேரில்காண்பதற்காக வந்தேன்.

எனக்கு திருப்பு முனையாக காக்க காக்க, நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் அமைந்தன. ஒவ்வொருவெற்றிப்படமும் எனக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

எனது அடுத்த படம் ஆறு. இதில் எனக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

ஜோதிகாவுடன் நடிக்கும் ஜில் என்று ஒரு காதல் படத்தின் படப்பிடிப்பின் சில காட்சிகள் ராஜமுந்திரியில் நடத்தஇருக்கிறோம். இந்தப் படத்தை என் உறவினர் ஒருவர் தான் தயாரிக்கிறார்.

ஜோவுடன் திருமணம்:


தெலுங்குப் படங்களில் நேரடியாக நடிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். ஒரே நேரத்தில் தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கவும் நான் ரெடி. ஆனால், எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாது.அதை இப்போது கற்று வருகிறேன் என்றார் சூர்யா.

இதையடுத்து எல்லா நிருபர்களுமே ஜோதிகாவை நீங்கள் திருமணம் செய்யப் போவது உண்மைதானே என்றுகேட்க, நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு சிரித்தார் சூர்யா.

ஆனால், உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று அவரை தொடர்ந்து நிருபர்கள் குடைந்ததால்சிரித்தபடியே, நடக்கும். அடுத்த ஆண்டு கூட அது நடக்கலாம் என்றார்.

கஜினி படத்தை பார்த்துவிட்டு சென்னையில் உள்ள சூர்யாவின் வீட்டுக்கு ஒரு மலர்க் கொத்தை அனுப்பினாராம்தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. தொடர்ந்து அவரது போன் காலும் வந்ததாம். சூர்யாவை ஏகத்துக்கும் பாராட்டித்தள்ளிவிட்டாராம் சிரஞ்சீவி.

Read more about: chiranjeevi praises surya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil