»   »  ரூ. 1 கோடியில் சூர்யா அறக்கட்டளை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, ரூ. 1 கோடி முதலீட்டில் சூர்யா அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பைத் துவக்குகிறார் நடிகர்சூர்யா. இதன்மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும், அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்படுகிற, மதிக்கப்படுகிறநாயகனாகவும் விளங்கும் நடிகர் சூர்யா, சமீப காலமாக சமூக சேவையில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்.குறிப்பாக ஆதரவற்றவர்கள், மன நலம் குன்றியவர்கள், கண் பார்வையற்றவர்கள் போன்றவர்களிடம் அவர் அதிக அன்பும்,ஆதரவும் காட்டி வருகிறார். அவ்வப்போது ஏதாவது உதவிகளை செய்து வரும் சூர்யா, அதை வெளியில் சொல்லிக்கொள்வதில்லை.போட்டோ பிடித்து பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் இல்லை.அந்த வகையில் கோவையில் உள்ள ஆதரவற்றோர் அமைப்பான சரணாலயத்திற்கு சூர்யா திடீர் வருகை தந்தார். அங்குள்ளஆதரவற்ற குழந்தைகளுடன் சில மணி நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏராளமான பொருட்களையும், உடைஉள்ளிட்டவற்றையும் கொடுத்து மகிழ்ந்தார்.பின்னர் சூர்யா கூறுகையில், எனக்குள் சமீப காலமாக ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்அதிகரித்து வருகிறது. இந்த எண்ணத்தை செயல்படுத்தும் நாள் தற்போது வந்து விட்டது.ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் புதிய அறக்கட்டளை ஒன்றை எனது பெயரில் தொடங்குகிறேன். ரூ. 1கோடியை ஆதார நிதியாகப் போடவுள்ளேன்.வருமான வரியில் இருந்து தப்பவோ, சுய நலத்துக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதை நான் செய்யவில்லை.ஆத்மார்த்தமாக இதை செய்யப் போகிறேன். நான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கியுள்ளேன்,அவ்வளவு தான்.இந்த அறக்கட்டளை மூலம் ஆதரவற்றவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத்திட்டமிட்டுள்ளேன்.சமீப காலமாக எனது படங்கள் நன்றாக ஓடுகின்றன, நல்ல வியாபாரம் செய்கின்றன. எனது சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்தநேரத்தில் நான் ஆதரவற்றோருக்கு உதவுவதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.எனது அறக்கட்டளை, சுகாதாரம், கல்வி, சிறுவர் நலம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும். அறக்கட்டளைதொடங்கப்பட்ட பின்னர் முதல் பணியாக சென்னையில் உள்ள ஒரு சிறுநீரக கழகத்திற்கு நான் உதவவுள்ளேன்.எனது உதவியின் மூலம், தென் மாவட்டங்களில் ஒன்றில் ரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை அந்த சிறுநீரகக் கழகம்தொடங்கவுள்ளது. அங்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வசதியற்றோர், ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் ரத்த சுத்திகரிப்புசெய்யப்படும் என்றார் சூர்யா.இப்படி அறக்கட்டளை தொடங்குவதற்கு ஐடியா கொடுத்தது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தானாம். அவர் தனது பெயரில்ரத்த வங்கி ஒன்றை ஆரம்பிக்க அதில் அவரது ரசிகர்கள் அனைவரும் வரிசையில் வந்து நின்று சேர இப்போது அந்த ரத்தவங்கியில் 5.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.ரத்தம் தேவைப்படுவோருக்கு இவர்கள் வரிசையில் நின்று இலவசமாக ரத்தம் தருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கில் சூர்யாவுக்குஏகப்பட்ட மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், சிரஞ்சீவியுடன் சும்மா பேசிக் கொண்டிருந்தபோது இந்த அறக்கட்டளை ஐடியாசூர்யாவின் மனதில் வந்ததாம்.சமீபத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டியூபர் குளோசிஸ் அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கச்சொல்லி சூர்யாவை அணுகினார்களாம். உடனே அதை ஒப்புக் கொண்டாராம்.எய்ட்ஸ், கேன்சர் பற்றி இருக்கும் அளவுக்கு கிட்னி பெயிலியர் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான போதிய நிதியுதவிகளும்கிடைப்பதில்லை என்ற வருத்தம் சூர்யாவுக்கு இருந்து கொண்டே இருந்ததாம்.இதை தனது தந்தை சிவக்குமாருடன் சூர்யா விவாதித்தபோது அறக்கட்டளைத் தொடங்கச் சொல்லி ஊக்கம் தந்ததாம் சூர்யாவின்குடும்பம்.சென்னை மாதிரி மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் கிட்னி பவுண்டேசன் தொடங்க வேண்டும் என்பது சூர்யாவின்விருப்பமாம்.அப்படியே சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை விண்ட் மில் எனப்படும் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில்போட்டு வருகிறார் சூர்யா. இயற்கையை கெடுக்காத மின்சார தயாரிப்பு என்பதால் அதில் பெரும் ஆர்வம் சூர்யாவுக்கு.எதிர்காலத்தில் சொந்தமான மிகப் பெரிய விண்ட் மில் மின் திட்டத்தை அமைக்கும் ஐடியாவும் இருக்கிறதாம்.இந் நிலையில் சமீபத்தில் வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பெரிய அமெளண்டைக் கொடுத்துவிட்டுவந்திருக்கிறார் சூர்யா.அப்போது சூர்யாவிடம் முதல்வர் கேட்ட கேள்வி...உங்க கல்யாணம் எப்போ...?என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நமக்குத் தெரியாதா என்ன.. ஒரு ஜென்டில் ஸ்மைல் தான்.பெரிய உதவிகளை திறந்த மனதோடு செய்யும் சூர்யாவுக்கு நம் வாழ்த்துக்கள்.

ரூ. 1 கோடியில் சூர்யா அறக்கட்டளை தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, ரூ. 1 கோடி முதலீட்டில் சூர்யா அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பைத் துவக்குகிறார் நடிகர்சூர்யா. இதன்மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும், அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்படுகிற, மதிக்கப்படுகிறநாயகனாகவும் விளங்கும் நடிகர் சூர்யா, சமீப காலமாக சமூக சேவையில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்.குறிப்பாக ஆதரவற்றவர்கள், மன நலம் குன்றியவர்கள், கண் பார்வையற்றவர்கள் போன்றவர்களிடம் அவர் அதிக அன்பும்,ஆதரவும் காட்டி வருகிறார். அவ்வப்போது ஏதாவது உதவிகளை செய்து வரும் சூர்யா, அதை வெளியில் சொல்லிக்கொள்வதில்லை.போட்டோ பிடித்து பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் இல்லை.அந்த வகையில் கோவையில் உள்ள ஆதரவற்றோர் அமைப்பான சரணாலயத்திற்கு சூர்யா திடீர் வருகை தந்தார். அங்குள்ளஆதரவற்ற குழந்தைகளுடன் சில மணி நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏராளமான பொருட்களையும், உடைஉள்ளிட்டவற்றையும் கொடுத்து மகிழ்ந்தார்.பின்னர் சூர்யா கூறுகையில், எனக்குள் சமீப காலமாக ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்அதிகரித்து வருகிறது. இந்த எண்ணத்தை செயல்படுத்தும் நாள் தற்போது வந்து விட்டது.ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் புதிய அறக்கட்டளை ஒன்றை எனது பெயரில் தொடங்குகிறேன். ரூ. 1கோடியை ஆதார நிதியாகப் போடவுள்ளேன்.வருமான வரியில் இருந்து தப்பவோ, சுய நலத்துக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதை நான் செய்யவில்லை.ஆத்மார்த்தமாக இதை செய்யப் போகிறேன். நான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கியுள்ளேன்,அவ்வளவு தான்.இந்த அறக்கட்டளை மூலம் ஆதரவற்றவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத்திட்டமிட்டுள்ளேன்.சமீப காலமாக எனது படங்கள் நன்றாக ஓடுகின்றன, நல்ல வியாபாரம் செய்கின்றன. எனது சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்தநேரத்தில் நான் ஆதரவற்றோருக்கு உதவுவதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.எனது அறக்கட்டளை, சுகாதாரம், கல்வி, சிறுவர் நலம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும். அறக்கட்டளைதொடங்கப்பட்ட பின்னர் முதல் பணியாக சென்னையில் உள்ள ஒரு சிறுநீரக கழகத்திற்கு நான் உதவவுள்ளேன்.எனது உதவியின் மூலம், தென் மாவட்டங்களில் ஒன்றில் ரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை அந்த சிறுநீரகக் கழகம்தொடங்கவுள்ளது. அங்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வசதியற்றோர், ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் ரத்த சுத்திகரிப்புசெய்யப்படும் என்றார் சூர்யா.இப்படி அறக்கட்டளை தொடங்குவதற்கு ஐடியா கொடுத்தது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தானாம். அவர் தனது பெயரில்ரத்த வங்கி ஒன்றை ஆரம்பிக்க அதில் அவரது ரசிகர்கள் அனைவரும் வரிசையில் வந்து நின்று சேர இப்போது அந்த ரத்தவங்கியில் 5.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.ரத்தம் தேவைப்படுவோருக்கு இவர்கள் வரிசையில் நின்று இலவசமாக ரத்தம் தருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கில் சூர்யாவுக்குஏகப்பட்ட மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், சிரஞ்சீவியுடன் சும்மா பேசிக் கொண்டிருந்தபோது இந்த அறக்கட்டளை ஐடியாசூர்யாவின் மனதில் வந்ததாம்.சமீபத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டியூபர் குளோசிஸ் அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கச்சொல்லி சூர்யாவை அணுகினார்களாம். உடனே அதை ஒப்புக் கொண்டாராம்.எய்ட்ஸ், கேன்சர் பற்றி இருக்கும் அளவுக்கு கிட்னி பெயிலியர் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான போதிய நிதியுதவிகளும்கிடைப்பதில்லை என்ற வருத்தம் சூர்யாவுக்கு இருந்து கொண்டே இருந்ததாம்.இதை தனது தந்தை சிவக்குமாருடன் சூர்யா விவாதித்தபோது அறக்கட்டளைத் தொடங்கச் சொல்லி ஊக்கம் தந்ததாம் சூர்யாவின்குடும்பம்.சென்னை மாதிரி மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் கிட்னி பவுண்டேசன் தொடங்க வேண்டும் என்பது சூர்யாவின்விருப்பமாம்.அப்படியே சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை விண்ட் மில் எனப்படும் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில்போட்டு வருகிறார் சூர்யா. இயற்கையை கெடுக்காத மின்சார தயாரிப்பு என்பதால் அதில் பெரும் ஆர்வம் சூர்யாவுக்கு.எதிர்காலத்தில் சொந்தமான மிகப் பெரிய விண்ட் மில் மின் திட்டத்தை அமைக்கும் ஐடியாவும் இருக்கிறதாம்.இந் நிலையில் சமீபத்தில் வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பெரிய அமெளண்டைக் கொடுத்துவிட்டுவந்திருக்கிறார் சூர்யா.அப்போது சூர்யாவிடம் முதல்வர் கேட்ட கேள்வி...உங்க கல்யாணம் எப்போ...?என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நமக்குத் தெரியாதா என்ன.. ஒரு ஜென்டில் ஸ்மைல் தான்.பெரிய உதவிகளை திறந்த மனதோடு செய்யும் சூர்யாவுக்கு நம் வாழ்த்துக்கள்.

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, ரூ. 1 கோடி முதலீட்டில் சூர்யா அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பைத் துவக்குகிறார் நடிகர்சூர்யா. இதன்மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகவும், அனைத்துத் தரப்பினராலும் ரசிக்கப்படுகிற, மதிக்கப்படுகிறநாயகனாகவும் விளங்கும் நடிகர் சூர்யா, சமீப காலமாக சமூக சேவையில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக ஆதரவற்றவர்கள், மன நலம் குன்றியவர்கள், கண் பார்வையற்றவர்கள் போன்றவர்களிடம் அவர் அதிக அன்பும்,ஆதரவும் காட்டி வருகிறார். அவ்வப்போது ஏதாவது உதவிகளை செய்து வரும் சூர்யா, அதை வெளியில் சொல்லிக்கொள்வதில்லை.

போட்டோ பிடித்து பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் இல்லை.

அந்த வகையில் கோவையில் உள்ள ஆதரவற்றோர் அமைப்பான சரணாலயத்திற்கு சூர்யா திடீர் வருகை தந்தார். அங்குள்ளஆதரவற்ற குழந்தைகளுடன் சில மணி நேரம் விளையாடி மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏராளமான பொருட்களையும், உடைஉள்ளிட்டவற்றையும் கொடுத்து மகிழ்ந்தார்.


பின்னர் சூர்யா கூறுகையில், எனக்குள் சமீப காலமாக ஆதரவற்றவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்அதிகரித்து வருகிறது. இந்த எண்ணத்தை செயல்படுத்தும் நாள் தற்போது வந்து விட்டது.

ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு தினம் முதல் புதிய அறக்கட்டளை ஒன்றை எனது பெயரில் தொடங்குகிறேன். ரூ. 1கோடியை ஆதார நிதியாகப் போடவுள்ளேன்.

வருமான வரியில் இருந்து தப்பவோ, சுய நலத்துக்காகவோ, விளம்பரத்துக்காகவோ இதை நான் செய்யவில்லை.ஆத்மார்த்தமாக இதை செய்யப் போகிறேன். நான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்கியுள்ளேன்,அவ்வளவு தான்.

இந்த அறக்கட்டளை மூலம் ஆதரவற்றவர்களுக்கு என்னால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத்திட்டமிட்டுள்ளேன்.

சமீப காலமாக எனது படங்கள் நன்றாக ஓடுகின்றன, நல்ல வியாபாரம் செய்கின்றன. எனது சம்பளமும் உயர்ந்துள்ளது. இந்தநேரத்தில் நான் ஆதரவற்றோருக்கு உதவுவதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.


எனது அறக்கட்டளை, சுகாதாரம், கல்வி, சிறுவர் நலம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும். அறக்கட்டளைதொடங்கப்பட்ட பின்னர் முதல் பணியாக சென்னையில் உள்ள ஒரு சிறுநீரக கழகத்திற்கு நான் உதவவுள்ளேன்.

எனது உதவியின் மூலம், தென் மாவட்டங்களில் ஒன்றில் ரத்த சுத்திகரிப்பு மையம் ஒன்றை அந்த சிறுநீரகக் கழகம்தொடங்கவுள்ளது. அங்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட வசதியற்றோர், ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் ரத்த சுத்திகரிப்புசெய்யப்படும் என்றார் சூர்யா.

இப்படி அறக்கட்டளை தொடங்குவதற்கு ஐடியா கொடுத்தது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தானாம். அவர் தனது பெயரில்ரத்த வங்கி ஒன்றை ஆரம்பிக்க அதில் அவரது ரசிகர்கள் அனைவரும் வரிசையில் வந்து நின்று சேர இப்போது அந்த ரத்தவங்கியில் 5.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம்.

ரத்தம் தேவைப்படுவோருக்கு இவர்கள் வரிசையில் நின்று இலவசமாக ரத்தம் தருகிறார்களாம். சமீபத்தில் தெலுங்கில் சூர்யாவுக்குஏகப்பட்ட மார்க்கெட் உருவாகியுள்ள நிலையில், சிரஞ்சீவியுடன் சும்மா பேசிக் கொண்டிருந்தபோது இந்த அறக்கட்டளை ஐடியாசூர்யாவின் மனதில் வந்ததாம்.

சமீபத்தில் காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டியூபர் குளோசிஸ் அமைப்பின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கச்சொல்லி சூர்யாவை அணுகினார்களாம். உடனே அதை ஒப்புக் கொண்டாராம்.


எய்ட்ஸ், கேன்சர் பற்றி இருக்கும் அளவுக்கு கிட்னி பெயிலியர் பற்றிய விழிப்புணர்வும், அதற்கான போதிய நிதியுதவிகளும்கிடைப்பதில்லை என்ற வருத்தம் சூர்யாவுக்கு இருந்து கொண்டே இருந்ததாம்.

இதை தனது தந்தை சிவக்குமாருடன் சூர்யா விவாதித்தபோது அறக்கட்டளைத் தொடங்கச் சொல்லி ஊக்கம் தந்ததாம் சூர்யாவின்குடும்பம்.

சென்னை மாதிரி மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் கிட்னி பவுண்டேசன் தொடங்க வேண்டும் என்பது சூர்யாவின்விருப்பமாம்.

அப்படியே சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை விண்ட் மில் எனப்படும் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில்போட்டு வருகிறார் சூர்யா. இயற்கையை கெடுக்காத மின்சார தயாரிப்பு என்பதால் அதில் பெரும் ஆர்வம் சூர்யாவுக்கு.


எதிர்காலத்தில் சொந்தமான மிகப் பெரிய விண்ட் மில் மின் திட்டத்தை அமைக்கும் ஐடியாவும் இருக்கிறதாம்.

இந் நிலையில் சமீபத்தில் வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பெரிய அமெளண்டைக் கொடுத்துவிட்டுவந்திருக்கிறார் சூர்யா.

அப்போது சூர்யாவிடம் முதல்வர் கேட்ட கேள்வி..

.உங்க கல்யாணம் எப்போ...?

என்ன பதில் சொல்லியிருப்பார் என்று நமக்குத் தெரியாதா என்ன.. ஒரு ஜென்டில் ஸ்மைல் தான்.

பெரிய உதவிகளை திறந்த மனதோடு செய்யும் சூர்யாவுக்கு நம் வாழ்த்துக்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil