ஏர்செல் மாடல் சூர்யா! ஏர்செல் நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாஸிடராக நடிகர் சூர்யாவை ஒப்பந்தம் செய்யதுள்ளது. ஒருவருடத்துக்கான இந்த ஒப்பந்தத்துக்கு சூர்யாவுக்கு பெரிய அளவில் துட்டு வெட்டப்பட்டுள்ளது.தமிழில் முன்னனி நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு இளைஞர்கள், இளைஞிகள் இடையே உள்ள கிரேஸைமனதில் வைத்து சாப்ட் ட்ரிங்க்ஸ் முதல் பைக்குகள் வரை அவரை மாடலாக போட்டு விளம்பரங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. சினிமா ஒரு பக்கம் விளம்பரங்கள் மறு பக்கம் என சூர்யாவும் படு பிஸி.தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை சத்தமில்லாமல் ஏழை எளியவர்களுக்கு நல்ல காரியங்கள்,மருத்துவ உதவிகள் செய்வதற்கு ஒதுக்கி வருபவர் சூர்யா. இந்தப் பழக்கம் அவரது தந்தை சிவக்குமாரிடம்இருந்து அவருக்கு வந்துள்ளது.இந் நிலையில் சூர்யாவை தனது பிராண்ட் அம்பாஸிடராக்கியுள்ளது ஏர்செல் நிறுவனம்.இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில்,ஏர்செல் நிறுவனம் ஆண்டுக்கு 50 சதவீதம் வளர்ந்து வருகிறது. முதன்முறையாக நடிகர் சூர்யாவை விளம்பரமாடலாக ஒப்பந்தம் செய்துள்ளோம்.ஏர்செல்லின் அனைத்து திட்டங்களுக்கான விளம்பரங்களிலும் அவர் தோன்றுவார். இவரை தவிர விளையாட்டுவீரர் ஒருவரையும் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.சென்ற ஆண்டு விளம்பரத்துக்காக இந்த நிறுவனம் ரூ. 15 கோடி செலவு செய்துள்ளது. இந்த ஆண்டு ரூ. 22கோடி செலவிட உள்ளார்களாம்.

By Staff

ஏர்செல் நிறுவனம் தனது புதிய பிராண்ட் அம்பாஸிடராக நடிகர் சூர்யாவை ஒப்பந்தம் செய்யதுள்ளது. ஒருவருடத்துக்கான இந்த ஒப்பந்தத்துக்கு சூர்யாவுக்கு பெரிய அளவில் துட்டு வெட்டப்பட்டுள்ளது.

தமிழில் முன்னனி நாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு இளைஞர்கள், இளைஞிகள் இடையே உள்ள கிரேஸைமனதில் வைத்து சாப்ட் ட்ரிங்க்ஸ் முதல் பைக்குகள் வரை அவரை மாடலாக போட்டு விளம்பரங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. சினிமா ஒரு பக்கம் விளம்பரங்கள் மறு பக்கம் என சூர்யாவும் படு பிஸி.

தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பெரிய பங்கை சத்தமில்லாமல் ஏழை எளியவர்களுக்கு நல்ல காரியங்கள்,மருத்துவ உதவிகள் செய்வதற்கு ஒதுக்கி வருபவர் சூர்யா. இந்தப் பழக்கம் அவரது தந்தை சிவக்குமாரிடம்இருந்து அவருக்கு வந்துள்ளது.

இந் நிலையில் சூர்யாவை தனது பிராண்ட் அம்பாஸிடராக்கியுள்ளது ஏர்செல் நிறுவனம்.

இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாஸ்கர் நிருபர்களிடம் பேசுகையில்,

ஏர்செல் நிறுவனம் ஆண்டுக்கு 50 சதவீதம் வளர்ந்து வருகிறது. முதன்முறையாக நடிகர் சூர்யாவை விளம்பரமாடலாக ஒப்பந்தம் செய்துள்ளோம்.

ஏர்செல்லின் அனைத்து திட்டங்களுக்கான விளம்பரங்களிலும் அவர் தோன்றுவார். இவரை தவிர விளையாட்டுவீரர் ஒருவரையும் ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

சென்ற ஆண்டு விளம்பரத்துக்காக இந்த நிறுவனம் ரூ. 15 கோடி செலவு செய்துள்ளது. இந்த ஆண்டு ரூ. 22கோடி செலவிட உள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X