பிறந்தநாள் அன்று அஜித் பற்றி ஒரு விஷயம் சொன்ன சுசீந்திரன்: நெகிழும் ரசிகர்கள் #HBDThalaAJITH

By Siva

சென்னை: அஜித் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறிய விஷயம் அவரின் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்துக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் அஜித்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் அஜித்தை வாழ்த்தியதுடன் ஒரு விஷயத்தையும் அனைவரிடமும் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நண்பன்

நண்பன்

நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

அவனது ஆபரேசனுக்கு 3 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம்...அப்பொழுது தான் முதன்முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜீத் சாரை சந்தித்தேன்.

உதவி

ரோஜாரமணனின் நிலையை கூறினேன்....அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

பெருமை

சுசீந்திரனின் ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் இதனால் தான் அஜித்தை எங்களுக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X