»   »  சொர்ணமால்யாவின் "ரசிகர் மன்றம்"!

சொர்ணமால்யாவின் "ரசிகர் மன்றம்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிரடி கவர்ச்சியில் புகுந்து விளையாடி வரும் சொர்ணமால்யாவுக்கு மேலும் ஒரு படம் புக்காகியுள்ளது.

மணிரத்னத்தின் அலைபாயுதேவில் அடக்க ஒடுக்கமாக வந்து போன சொர்ணமால்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தை மறக்ககவர்ச்சிப் புரட்சியில் இறங்கினார்.

இவர் முற்றிலும் கவர்ச்சியாக நடித்துள்ள ஸாரி, எனக்கு கல்யாணமாயிடிச்சி படம் சென்சார் போர்டில் சிக்கித் தவித்து வரும் வேளையில்அடுத்தடுத்து படங்கள் புக்காகி வருகின்றன.

பிரபல மலையாள டைரக்டரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் காதல் பறவைகள் என்ற படத்தில் சொர்ணமால்யா கதாநாயகியாகநடிக்கிறார். வழக்கமாக செக்ஸ் படங்களை மட்டுமே அதிகமாக இயக்கி புகழ் பெற்றவர் தான் இந்த கே.எஸ்.

ஆனால் இம்முறை அப்படியில்லையாம். முழுக்க முழுக்க இது காதல் படமாம். ஏழை, பணக்காரன், சாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன்என எல்லாவற்றிலும் வேறுபாடு உண்டு. ஆனால் காதல் மட்டும் அனைவருக்கும் பொதுவானது என்பது தான் இந்தப் படத்தின்மையக்கருவாம்.

இந்தப் படத்தில் சொர்ணமால்யாவுடன் ஜோடி சேர்பவர் குறும்பு படத்தில் நடித்த நரேஷ். தேவன், அலெக்ஸ், ராஜேஷ், செந்தில் மற்றும் பலர்நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சொர்ணமால்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காற்றுக்கென்ன வேலி, உள்ளக் கடத்தல் என இரண்டு படங்களை இயக்கியுள்ளவர் புகழேந்தி தங்கராஜ். இவர் அடுத்து இயக்கப் போகும்படம் ரசிகர் மன்றம். நடிகர்களை நம்பி அவர்கள் பின்னால் போகும் ரசிகர்கள் இறுதியில் என்னவாகிறார்கள் என்பதைக் கதைக் களமாகக்கொண்டு உருவாகவுள்ள படம் ரசிகர் மன்றம்.

இதில் தான் சொர்ணமால்யா முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஒரு நடிகையாக இந்தப் படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கேள்வி.இதில் அவரது கவர்ச்சியையும், பரபரப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் புகழேந்தி தங்கராஜ்.

இப்படத்தில் இரண்டு புதுமுக இளைஞர்கள் ஹீரோக்களாக நடிக்கவுள்ளனர். அவர்களுக்கான ஜோடியும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

சொர்ணமால்யா தவிர நாசரும், பாபுகணேஷும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். எஸ்.பி.பூபதி இசையமைக்கிறார். கபிலன்பாடல்களை எழுதியுள்ளார். பாட்டுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு விட்டன.

தமிழ்மகன் வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்கப் போகிறார் புகழேந்தி தங்கராஜ்.

இம்மாத இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்கி பொள்ளாச்சி, போடி, மூணாறு ஆகிய பகுதிகளில் ஷூட்டிங்கை தொடரவிருக்கிறார்களாம்.

Read more about: sornamalya in rasikar manram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil