twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாயாலேயே மியூஸிக் போடுறேன்னு கிண்டல் பண்றாங்க.. எஸ்பிபியின் நினைவுநாள் நிகழ்ச்சியில் டிஆர் உருக்கம்!

    |

    சென்னை: எஸ்பிபியின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார் நடிகரும் இயக்குநருமான டிஆர்.

    Recommended Video

    பாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்

    இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

    அப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியாஅப்போ இவங்க எல்லாம் பிக்பாஸுக்கு போகலையா... உண்மையை உடைத்த சோஷியல் மீடியா

    இந்நிலையில் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார் டி ராஜேந்தர்.

    நேற்று முன் தினம் நினைவு நாள்

    நேற்று முன் தினம் நினைவு நாள்

    பிரபல பாடகரான எஸ்பி பால சுப்பிரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி, அதிலிருந்து மீண்ட பிறகும் கூட அதன் பின் விளைவுகளால் மரணமடைந்தார். சினிமாவில் இதுவரை 16 மொழிகளில் 42000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் எஸ்பிபி. அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன்தினம் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் அணுசரிக்கப்பட்டது.

    எஸ்பிபியின் நினைவுகளை பகிர்ந்த டிஆர்

    எஸ்பிபியின் நினைவுகளை பகிர்ந்த டிஆர்

    இதனை முன்னிட்டு சென்னையில் எஸ்பிபிக்கு திரை பிரபலங்கள் பங்கேற்ற நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தர் பங்கேற்றார். அப்போது எஸ்பிபி குறித்த பல்வேறு நினைவுகளையும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    இந்த பாலை எப்படி மறப்பேன்?

    இந்த பாலை எப்படி மறப்பேன்?

    அப்போது அவர் பேசியதாவது, மூத்தவர்கள் சாதித்தவர்களை எனக்கு பிடிக்கும். அவரை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். நான் சிறு பையனாக சினிமாவுக்கு வந்த போது என் வளர்ச்சிக்கு உதவியவர்கள் என்னை ஆளாக்கியவர்களில் அண்ணனும் ஒருவர் என நா தழுதழுத்தார் டிஆர்.

    பாலை மறந்துவிட்டு இருக்க முடியாது என தாய் கொடுத்த தாய்ப்பால், அவர் கொடுத்த தமிழ்ப்பால், துணிப்பால், இசைப்பால், நினைப்பால் தனது ஸ்டைலில் பட்டியலிட்ட டிஆர், அந்த பாலையே மறக்க முடியாத நான் இந்த பாலை எப்படி மறப்பேன் என்று நெகிழ்ந்தார்.

    வாசமில்லா மலர் இது பாடல்

    வாசமில்லா மலர் இது பாடல்

    தன் வாழ்க்கையில் தனது இசையை பாலாக , இசையாக, இசைத் தேனாக மாற்றிக்கொடுத்த இந்த பாலை எப்படி மறக்க முடியும் என்றும் ஆதங்கப்பட்டார். வாசமில்லா மலர் இது பாடலை பாடிக்கொடுத்த அந்த பாசமலருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன், அவர் வாழும்போது கண் மூடி கிடந்ததை பார்த்திருக்கிறேன் ஆனா அவர் வாய் மூடி இருந்ததை பார்த்ததில்லை. அவர் வாய் மூடி இருப்பதை பார்க்க விரும்பவில்லை. என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என் மனதில் மட்டுமில்ல பல ரசிகர்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    வரிகளை சொல்லி சிரிக்க வேண்டும்

    வரிகளை சொல்லி சிரிக்க வேண்டும்

    என் பாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர். வாசமில்லா மலர் இது பாடும் போது அதன் வரியை கேட்டார். வரிகளை சொல்லிவிட்டு சிரிக்க வேண்டும் என்றேன். எப்படி சிரிப்பது என்று கேட்டார், அங்கிருந்த அனைவரும் சிரித்தார்கள். பாடி சிரித்து காண்பித்தேன். அனைவரும் அமைதியானார்கள். அன்று என் பாட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் அண்ணன் பாலு.

    வாயாலேயே மியூஸிக் போடுறேன் கிண்டல்

    வாயாலேயே மியூஸிக் போடுறேன் கிண்டல்

    நான் ஒரு தகரம் என்பேன்.. நீங்கள் பாட பாட என் பாடல் தங்கம் போல் ஜொலிக்கும் என்பேன்.. தகரமான என்னை தங்கம் ஆக்கியவர் அண்ணன் எஸ்பிபி. அதனால் தான் அவர் சிகரம். குரலால் என் கலையை தட்டி தட்டி செதுக்கிய சிற்பி அண்ணன் பாலு. நான் சொன்ன சொல் கட்டையை இப்போது சொல்வேன். ஆனால் வாயாலேயே தாளம் போடுகிறான் என கிண்டல் செய்வார்கள் என்றும் வருத்தப்பட்டார் டிஆர்.

    English summary
    T Rajender shares his experience with SPB on his death anniversary. TR Shared many things emotionaly about SPB.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X