twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பெஷல்ஸ்

    By Staff
    |
    கணவரை அடித்ததாகக் குற்றம்
    சாட்டப்பட்டு தலிபான்களால்
    நடுரோட்டில் வைத்து சுட்டுக்
    கொல்லப்படும் ஆப்கன் பெண்
    ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி செய்யும் விதம், அங்கு வாழும் மக்களுக்கு நேரும்கொடுமைகள், குறிப்பாக பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை மையமாக வைத்து குறித்து இந்தியில்திரைப்படம் உருவாகவுள்ளது.

    இந்தப் படத்தில் பிரபல நடிகை தபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

    முதல்முறையாக தலிபான் தீவிரவாதிகள் ஆட்சி செய்யும் விதத்தையும், அங்கு வாழும் குடும்பத்தலைவிகள் படும்அவஸ்தைகளையும் இந்தப் படம் சித்தரிக்கவுள்ளது. ஆப்கானிஸ்தானில் பல வங்காளிகள் வசித்து வருகின்றனர்.அங்கு கடைகள் வைத்து நடத்தி வந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் வங்காளிகள் தான்.

    அங்கு தலிபான் தீவிரவாதிகள் கையில் ஆட்சி சிக்கியவுடன் பர்தா அணியாமல் பெண்கள் வெளியே வரத் தடை,குடும்ப ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக் கூடாது, பெண்கள் வேலை பார்க்கத் தடை என பலதடைகள் அமலுக்கு வந்துள்ளன.

    இதனால் பல வங்காளக் குடும்பங்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டன.

    இந்த சம்பவங்களை கருவாக வைத்து கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி,காபுலிவாலார் பெங்காலி பாவ் (ஆப்கானில் வாழும் வங்காள மருமகள்) என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதைஇப்போது இந்தியில் திரைப்படமாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளார் சுஷ்மிதா.

    நடுத் தெருவில் கிடக்கும்
    தலிபான் எதிர்ப்பாளர்களின் பிணங்கள்
    எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜியும் ஆப்கானிஸ்தானில் வசித்தவர் தான். அந்நாட்டைச் சேர்ந்த வியாபாரிஜான்பாஸ் கானை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் தலைநகர் காபூலில் இருந்து சிலகிலோமீட்டர் தொலைவில் உள்ள சரானா கிராமத்தில் வசித்து வந்தார்.

    அவர்களது வாழ்க்கை முறை பிடிக்காததாலும், கணவன் குடும்பத்தாரின் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காகவும்பானர்ஜி அவர்களிடமிருந்து 1998 ம் ஆண்டு பிரிந்தார். ஆனால், கணவர் ஜான்பாஸ் கானை இன்னும் தனக்குபிடித்திருக்கிறது என்கிறார். அவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என்கிறார்.

    பானர்ஜி தனது கணவன் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்தது மிகவும் சோகமான வரலாறு. முதலில் சரானாகிராமத்திலிருந்து காபூலுக்குத் தப்பித்து வந்தார். அங்கிருந்து பாகிஸ்தானுக்கு வந்த அவர் இஸ்லாமாபாத்திலுள்ளஇந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டார்.

    இந்தியத் தூதரக அதிகாரிகளின் துணையுடன் கொல்கத்தா திரும்பினார். அப்போது இவரது சோகக்கதை பலபத்திரிக்கைகளில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    தலிபான் ஆட்சி முறை குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்தும் இவர் இப்போது திரைப்படம்எடுக்கவுள்ளார்.

    இந்தத் திரைப்படத்தில் ஹிந்தித் திரைப்பட நடிகை தபு முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.

    கதை, திரைக்கதை வசனத்தை பிரபல திரைப்பட வசனகர்த்தா குல்சார் எழுதுகிறார். சுஷ்மிதா இந்தத்திரைப்படத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றப் போகிறார். இந்தத் திரைப்படத்தை உஜ்வால் சடோபத்யாய்இயக்குகிறார்.

    கிரேனில் தூக்கு போடப்படும்
    தலிபான் எதிர்ப்பாளர்
    இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், நான் 1989 ம் ஆண்டு முதல் 1995 ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் வசித்துவந்தேன். அப்போது தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியை நேரில் அனுபவித்தேன். அதனால் அனுபவப்பூர்வமாகஇந்தத் திரைப்படத்தை டைரக்ட் செய்ய முடியும்.

    தபு உள்பட பலர் நடிக்கும் இந்தத் திரைப்பட ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. ஷூட்டிங்கைராஜஸ்தான் பாலைவனம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தத் திரைப்படத்துக்குபூபேன் ஹசாரிகா இசையமைக்கவுள்ளார். இவர் சிறந்த பாடகரும் கூட.

    ஆப்கானிஸ்தானில் சிறு, சிறு தவறுகள் செய்தது தொடர்பாக பெண்களும், ஆண்களும் எவ்வாறு கடுமையாகத்தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள்மீறப்படுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே இந்தத் திரைப்படத்தைஎடுக்கவுள்ளோம்.

    எனது கணவரிடம் கடந்த டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு இந்தியா வருவதற்கு விசாகிடைக்கவில்லை. இதுகுறித்து இங்குள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு அவரைஇந்தியாவுக்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

    இந்தப் படம் வங்காள மற்றும் ஆங்கில மொழிகளில் டப்பிங் செய்யப்படவும் உள்ளது.

    இவர் ஆபகான் குறித்து ஆப்கான், தலிபான் மற்றும் நான் என்ற இரண்டாவது புத்தகத்தையும் எழுதியுள்ளார்.அதில், தலிபான் தீவிரவாதிகள் குறித்தும், அவர்களது அடிப்படை வாழ்க்கை முறை பற்றியும் எழுதியுள்ளார்.

    இதற்கிடையே, சிலை வழிபாடு இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் ஆப்கானிஸ்தானில் புத்தர்சிலைகளைத் தீவிரவாதிகள் உடைத்து வரும் இந்த நேரத்தில் தலிபான் ஆட்சிமுறை குறித்து ஹிந்தியில் திரைப்படம்வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐ.ஏ.என்.எஸ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X