»   »  தமன்னா-நமிதா-மாளவிகா!

தமன்னா-நமிதா-மாளவிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் படத்தைத் தந்த பாலாஜி சக்திவேலின் அடுத்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவுடன் வியாபாரி படத்தை முடித்து விட்டு பாலாஜி படத்துக்குப் பாய்கிறார் தமன்னா.

ஷங்கரின் சிஷ்யரான பாலாஜி சக்திவேல் தந்த காதல், இன்னும் கூட ரசிகர்களின் மனதிலிருந்து அகலவில்லை.காதல் என்ற நல்ல படத்தை மட்டுமல்லாமல், சந்தியா என்ற அட்டகாச நாயகியையும் தமிழ் சினிமாவுக்குக்கொடுத்தவர் பாலாஜி.

காதல் படத்தின் தாக்கம் சந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. அவரை இன்னும் கூட காதல் நாயகி என்றுதான்கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகு சந்தியாவுக்கு சூப்பர் ஹிட் படம் ஏதும் வரவில்லை என்பதும்இதற்கு இன்னொரு காரணம்.

காதலுக்குப் பிறகு புதிய படம் இயக்காமல் அமைதி காத்து வந்த பாலாஜி இப்போது பேப்பர், பேட், பேனா,தொப்பி சகிதம் அடுத்த படத்துக்குத் தயாராகி விட்டார்.

பாலாஜி சக்திவேல் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஆனால் ஹீரோயினைபிடித்துப் போட்டு விட்டார்கள். தடதட அழகி தமன்னாதான் பாலாஜியின் அடுத்த நாயகி.

வியாபாரியில் இப்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து வித்தை காட்டி வருகிறார் தமன்னா. இதை முடித்ததும்பாலாஜி படத்துக்கு வருகிறார்.

வியாபாரியில் தமன்னா, கோழி உ>ப்பதைப் போல உரித்துக் கொண்டிருக்கிறார்களாம். இதற்குக் காரணம்நமீதாதான். பிரமாண்ட நமீதாவுக்கு முதலில் சின்ன ரோல்தான் என்று கூறினார்கள். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவின்வேண்டுகோளை ஏற்று நமீதாவின் கேரக்டரை விரித்து விட்டார்கள்.

படம் முழுக்க வருவது போல நமீதாவின் கேரக்டரை ஆல்டர் செய்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கிளாமரையும்குண்டக்க மண்டக்க கூட்டி விட்டாராம். இதை அறிந்த தமன்னா, தன்னையும் அதுபோலவே பாவிக்குமாறுஅன்பொழுக கேட்டுக் கொண்டாராம்.

இதைக் கேட்டதும் பத்து பாட்டில் பூஸ்ட்டை ஒரே மடக்கில் குடித்தது போல சக்தி கூடிய ஷக்தி மளமளவெனதமன்னா ரோலையும் விலாவாரியாக விஸ்தரித்து விட்டாராம்.

நமீதா, தமன்னாவின் கவர்ச்சிப் போட்டியால் தியேட்டரில் திரை கிழியப் போவது நிச்சயம் என்கிறார்கள்.

இவர்களின் கவர்ச்சிப் போட்டியில் மாளவிகா கலந்து கொள்ளாமல் கமுக்கமாக ஒதுங்கி விட்டாராம். வழக்கமாகசொல்லாமல் கொள்ளாமல் ஜில்லிட வைப்பவர்தான் மாளவிகா. ஆனால் கல்யாணம் நிச்சயமாகி விட்டதால்தான்கவர்ச்சிப் போட்டியில் கால் வைக்க தோணாமல் ஒதுங்கிக் கொண்டாராம்.

இது எப்டி இருக்கு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil