சிம்ரன் இடத்தில் தமன்னா!-ஷங்கர் கணிப்பு

By Staff

Tamanna
தமன்னாவின் நடிப்பு படத்துக்குப் படம் முன்னேறி வருகிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் சிம்ரனின் இடத்தைப் பிடிப்பார் தமன்னா என்றார் இயக்குநர் ஷங்கர்.

சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், "லிங்குசாமி மிகச் சிறந்த இயக்குநர். சில படங்களில் பாட்டு நன்றாக இருக்கும். படமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வசூல் நன்றாக இருக்காது. லிங்குசாமி படங்களில் வசூலும் நன்றாக இருக்கும். எல்லா அம்சங்களையும் ஒருசேர கொடுக்கும் இயக்குனர் அவர். இந்த படத்தின் இசையும், ஒளிப்பதிவும் சர்வதேச தரத்தில் உள்ளன.

தமன்னாவின் நடிப்பில் படத்துக்கு படம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீக்கிரமே அவர் சிம்ரன் இடத்தை பிடிப்பார்.

பொதுவாக நிறைய பாடல்கள் எழுதினால், தரம் குறைய ஆரம்பிக்கும். ஆனால் நா.முத்துக்குமார் எழுதுகிற எல்லா பாடல்களும் தரமாக உள்ளன..." என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் - இயக்குநர் பார்த்திபனின் பேச்சில் ஒரே ஜொள் மழை...

அவர் கூறுகையில், "ஒரு பத்திரிகையில் "தமன்னா இடுப்பில் கிள்ளினால் என்னவாகும்?" என்று ஒருவர் கேட்டதற்கு, அதற்கு, 'அந்த இடம் சிவப்பாகி விடும்' என்று பதில் போட்டிருந்தார்கள். 'எந்த இடம்' என்று சொல்லவில்லை... தமன்னாவின் இடுப்பா அல்லது கிள்ளியவரின் கன்னமா?

நான் இப்படிச் சொல்லக் காரணம், ஏற்கனவே தமிழ் ரசிகர்களின் மனதில் தமன்னா இடம்பிடித்து விட்டார். இந்த படம் ரிலீசானால், சொல்லவே வேண்டாம். தமன்னா பிரேமின் ஓரத்தில் நின்றாலே ரசிகர்கள் மனதெல்லாம் ஈரமாகிவிடும். இந்தப் படத்தில் ஒரு பாடலில் தமன்னா ஈரமாகவே வந்து நிற்கிறார். ரசிகர்கள் மனசு என்னவாகும்? திரையே பத்திக்கிட்டு எரிகிறது.

ஏற்கனவே தமன்னா 'மார்பிள்' சிலை மாதிரி இருக்கிறார். இந்த படம் ரிலீசுக்குப்பின், ஆண்கள் மனசுக்குள் சிலை வைக்கிற அளவுக்கு இருப்பார்.." என்றெல்லாம் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X