அம்ரேஷுக்கு 'டபுள் போனஸ்'!
நடிகை ஜெயச்சித்திராவின் மகன் அம்ரேஷ் கணேஷ் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் அவருடன் தமன்னாவும், அனுஷ்காவும் நடிக்கவுள்ளனராம்.
நானே உன்னுள் இல்லை என்ற படம் மூலம் தனது மகன் அம்ரேஷ் கணேஷை நாயகனாகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார் ஜெயச்சித்திரா. படம் பெரிய அளவில் ஓடவில்லை. இருந்தாலும் அம்ரேஷ் தற்போது தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இந்தப் புதிய படத்தில் அம்ரேஷுக்கு செம அதிர்ஷ்டம். காரணம், அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளாராம். அது போதாதென்று அனுஷ்காவும் படத்தில் இருக்கிறாராம்.
புதிய வரவான அம்ரேஷுடன் இரண்டு ஹாட்டஸ்ட் நாயகிகள் இணைந்து நடிப்பது தெலுங்குத் திரையுலகில் வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெரும் பொருட் செலவில் இப்படத்தை உருவாக்குகிறார்களாம். இப்படம் அம்ரேஷுக்கு தெலுங்கில் சரியான இடத்தை ஏற்படுத்தித் தரும் என்று ஜெயச்சித்திரா நம்பிக்கையுடன் உள்ளாராம்.
தமிழில் விட்ட மார்க்கெட்டை தெலுங்கில் பிடிப்பாரா அம்ரேஷ்?


Click it and Unblock the Notifications











