இவ்வளவா வாங்குறாய்ங்க? ரஜினி, விஜய், அஜித்... தமிழ் ஹீரோக்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்

By

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ படம் ஹிட்டாகிவிட்டால், அடுத்த நிமிடமே அவரது சம்பளம் தாறுமாறாக ஏறிவிடும். ஹிட்டாகவில்லை என்றால் முந்தைய பட சம்பளம்தான் அடுத்தப் படத்துக்கும்.

இது காலங்காலமாக நடக்கும் விஷயம். தெலுங்கில் ஒரு ஹீரோவுக்கான படம் எவ்வளவு பிசினஸ் ஆகிறதோ, அதில் பத்து பர்சன்ட் ஹீரோவுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது.

இங்கு அப்படியில்லை. ஹீரோ நிர்ணயிப்பதுதான் சம்பளம். ரசிகர்கள், கைதட்டி, விசிலடித்து, சமூக வலைத்தளங்களில் மற்ற ஹீரோவின் ரசிகர்களுடன் முட்டி, மோதி, கமென்ட் போட்டு கலாய்ப்பதெல்லாம் இந்த ஹீரோக்களின் சம்பளத்தை உயர்த்தத்தான்!

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அதன்படி சம்பள விவகாரத்தில் டாப்பில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் வாங்கும் சம்பளம் ரூ.100 கோடி. முந்தைய படத்துக்கு 90 வரை வாங்கிய அவர், இப்போது நடிக்கும் படத்துக்கு இத்தனை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது கோலிவுட் தகவல்.

தளபதி விஜய்

தளபதி விஜய்

ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் 'தளபதி' விஜய். இப்போது நடிக்கும் மாஸ்டர் படத்துக்கு ரூ.70 கோடி பிளஸ் வரி என ரூ.80 வாங்கியிருக்கும் அவர், அடுத்த படத்துக்கு 80 கோடி பிளஸ் டாக்ஸ் என்று கேட்டிருக்கிறாராம். அதாவது கிட்டத்தட்ட ரூ.90 கோடி வரும் என்கிறார்கள்.

அஜித்குமார்

அஜித்குமார்

சரியாக வரிகட்டி, வெள்ளையாக வாங்கும் வெள்ளை மனதுக்காரர் என்கிறார்கள் அஜித்தை. அவரது சம்பளம் ரூ.65 கோடியாம். அடுத்தப் படத்தில் இந்த சம்பளம் ஏறும் என்பது சில தயாரிப்பாளர்களின் கணிப்பு.

சூர்யா

சூர்யா

நடிகர் சூர்யா பெரும்பாலும் தனது மற்றும் வேண்டிய நிறுவனங்களிலேயே நடித்துவருகிறார். இருந்தாலும் பட்ஜெட்டில் அவருக்கு சம்பளம் என்று ஒரு தொகையை ஒதுக்குகிறார்கள், அது ரூ.35 கோடி. இது சில நேரம் அதிகமாகலாம். குறைய வாய்ப்பில்லை.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன், இவ்வளவு கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக உயர்வார் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். அவரது இப்போதையை சம்பளம் ரூ.18 கோடி. அடுத்து ஒரு படம் ஓடிவிட்டால், இந்த 18, ரூ. 20 கோடியாகலாம் என்பது கணிப்பு.

தனுஷ்

தனுஷ்

'அசுரன்' படத்தின் சூப்பர் ஹிட் தனுஷின் பிசினஸை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது. அவரது இப்போதைய சம்பளம் ரூ.15 கோடியாம். இன்னும் ஒரு ஹிட் கொடுத்தால், 15, ரூ.17 கோடி ஆகும் என்கிறார்கள் கோலிவுட்டில்.

கார்த்தி

கார்த்தி

பெரும்பாலும் சொந்த பட நிறுவனத்திலேயே நடித்துவருகிறார் கார்த்தி. சமீபத்தில் வெளியான அவரது 'கைதி' ஹிட். ஆனால், ஜோதிகாவுடன் நடித்த 'தம்பி' பெரிய ஹிட் இல்லை என்றாலும் நஷ்டமில்லை என்கிறார்கள். அவர் சம்பளம் ரூ.15 கோடி.

விஷால்

விஷால்

நடிகர் விஷாலும் தனது விஷால் பிலிம்பேக்டரி தயாரிக்கும் படங்களிலேயே அதிகமாக நடித்துவருகிறார் . அவரது சம்பளம் ரூ.10 கோடி என்கிறார்கள். ஒரே ஒரு ஹிட், இந்த தொகையை மாற்றும்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க, விஜய் சேதுபதி ரூ.8 கோடி சம்பளம் வாங்கியதாகச் சொல்கிறார்கள். தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக, ரூ.10 கோடி வாங்கியிருக்கிறாராம். அவரது சம்பளம் ரூ.10 கோடிதான் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X