ஆறாவது அறிவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்தவர்.. தந்தை பெரியாரை போற்றும் சினிமா பிரபலங்கள்!
சென்னை: பகுத்தறிவு பகலவனாக போற்றப்படும் தந்தை பெரியாரின் 143வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் இந்த நாளில் தந்தை பெரியாரை நினைத்து போற்றி வருகின்றனர்.
இயக்குநர் சேரன், வைரமுத்து, நவீன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பெரியார் குறித்து சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இங்கே காண்போம்.

சமூக நீதி நாள்
தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக இனி கொண்டாடுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுத்தறிவு பகலவன், எந்த ஃப்ரேம்களுக்குள்ளும் அடங்காதவர் என்கிற ஏகப்பட்ட அடைமொழிகளுடன் தடி கொண்டு பலருக்கு இடியாக இருக்கும் பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

ஆறாவது அறிவை அறிமுகப்படுத்தியவர்
இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆறாவது அறிவை நமக்கெல்லாம் அறிமுகம் செய்தவர்.. ஆட்டு மந்தைகளாய் ஓடிய நம்மை சிந்திக்க தூண்டிய பெருமகனார் பெரியார்... பிறந்ததினம்..." என பெரியாரின் ஓவியம் ஒன்றை ஷேர் செய்து ட்வீட் செய்துள்ளார்.

கோடியில் ஒருவர்
"கோடியில் ஒருவரான தந்தை பெரியாரின் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் ஆண்டனி அவர்களின் #KodiyilOruvan கோடிகளில் வசூல் சாதனை செய்ய வாழ்த்துகள்! படம் பார்த்தவர்கள் நிச்சயம் சூப்பர் ஹிட் என்று சொல்கிறார்கள். இயக்குநருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் வாழ்த்துகள்" என தந்தை பெரியார் பிறந்தநாளையும் கோடியில் ஒருவன் படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

நன்றி அய்யா
மற்றொரு ட்வீட்டில் இயக்குநர் நவீன் நன்றி அய்யா என்றும் #சமூக நீதி நாள் என்றும் #தந்தை பெரியார் என்றும் பதிவிட்டு பெரியார் தடியுடன் இருக்கும் சில்ஹவுட் ஓவியத்தை பதிவிட்டு பெரியாரை போற்றி உள்ளார். இயக்குநர் நவீனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் தந்தை பெரியாரை போற்றி வருகின்றனர்.

தி லீடர்
விஜய்சேதுபதியின் புரியாத புதிர் மற்றும் ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது ட்விட்டர் பக்கத்தில் தி லீடர், தீ ஹீரோ என தந்தை பெரியாரின் டிஜிட்டல் ஓவியத்தை ஷேர் செய்து தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும், பல பிரபலங்களும் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











