twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கு முன்னோடியாக இருந்த எம்.என்.நம்பியார்! - மறைக்கப்பட்ட சாதனை

    |

    சென்னை : வில்லன் வேடத்திற்காகவே பிறந்தவர், என்பது போன்ற தோற்றமும், நடிப்பும் கொண்டிருந்த எம்.என்.நம்பியார், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். படங்களில் இவரது தோற்றமும் நடிப்பும் மக்களை மிரட்டினாலும், நிஜத்தில் அமைதியான சுபாவம் கொண்டவராக இருந்த நம்பியாரின் 100 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது குடும்பத்தார் சென்னையில் 'நம்பியார் நூற்றாண்டு விழா' நிகழ்ச்சியை நேற்று (நவ.19) நடத்தினார்கள்.

    இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் பங்கேற்பார்கள், என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் நேற்று நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இளையராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். பழம்பெரும் நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, இயக்குநர்கள் பி.வாசு, சந்தானபாரதி, நடிகர்கள் சிவகுமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவல் துறை அதிகாரி விஜயகுமார், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா கொண்டாப்பட்ட இந்த தருணத்தில், அவரின் ஒழுக்கமான தனிப்பட்ட வாழ்க்கையையும், நடிப்பின் தனி பாணியையும் வெகுவாக பாராட்டினாலும், அவர் நிகழ்த்திய சாதனையை தமிழ் சினிமா மறந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

    நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட நம்பியார், அதன் பிறகு சினிமாத் துறைக்குள் நுழைந்தவர், ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோவாகவே நடித்தார். அதன் பிறகு வில்லன் வேடத்தில் நடிக்க தொடங்கியவர், சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோர்க்கு ஏற்ற கம்பீரமான வில்லன் என்ற முத்திரையோடு, தனது தனித்துவமான பாணியால், வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், என்ற முத்திரையோடு பயணிக்க தொடங்கினார்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    ரசிகர்களின் கண்ணுக்கு கொடூரமான வில்லனாக தெரிந்த எம்.என்.நம்பியார், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு முன்பாகவே ஒரே படத்தில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். ஆம், 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் நம்பியார் 12 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    1964 ஆம் ஆண்டு வெளியான 'நவராத்ரி' படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்ததும், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்ததும் சாதனையாக கருதப்பட்டு, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இவர்களுக்கு முன்பாகவே, 1950 ஆம் ஆண்டு வெளியான 'திகம்பர சாமியார்' படத்தில் நம்பியார் 12 வேடங்களில் நடித்தது, மறைக்கப்பட்டு விட்டது.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கும் நடிகர் எம்.என்.நம்பியார், தொழில் வேறு, வாழ்க்கை வேறு, என்பதிலும் தெளிவாக இருந்தார். என்னதான் கொடூரமான வில்லனாக நடித்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தவித கிசுகிசுக்களிலும் சிக்காமல், ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு காட்டி வந்தவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மாலை போட்டிருக்கிறார். இதனால், அவரை மகா குருசாமி என்றும் அழைக்கின்றனர்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    கேரளாவில் பிறந்த எம்.என்.நம்பியார், இளம் வயதிலேயே ஊட்டிக்கு இடம் பெயர்ந்து அங்கேயே சில வருடங்கள் படிப்பை தொடர்ந்தவர், அங்கு நாடகம் நடத்த வந்திருந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான 'மதுரை தேவி பால வினோத சங்கீதசபா' வில் இணைந்து கலைத்துறையில் பயணிக்க தொடங்கினார்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    50 ஆண்டுகளுக்கு மேலாக வில்லனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையை பெற்ற எம்.என்.நம்பியார், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு'ஜங்கள்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார்.

    Tamil Cinema forget for Actor MN Nambiars achievement

    English summary
    Born for the role of villain, MN Nambiar, who looked and acted like a villain, had a special place in Tamil cinema. Nambiar's 100th Birthday To celebrate, his family held a Nambiar centenary celebration in Chennai yesterday (Nov. 19).
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X