twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ராஸ் 382: வணக்கம் வாழ வைக்கும் சென்னை.. சென்னையின் பெருமை பேசிய தமிழ் சினிமா பாடல்கள்!

    |

    சென்னை: மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இடம்பெற்ற சென்னையை போற்றும் பாடல்கள் குறித்த பட்டியலை பார்க்கலாம்.

    சென்னை முன்பு மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாநகர் தனக்கென பல சிறப்பான அடையாளங்களை கொண்டுள்ளது.

    என்ன சொல்றீங்க...அண்ணாச்சி படத்தில் மீண்டும் விவேக் நடிக்கிறாரா... எப்படி ? என்ன சொல்றீங்க...அண்ணாச்சி படத்தில் மீண்டும் விவேக் நடிக்கிறாரா... எப்படி ?

    அதில் முக்கியமானது மெரினா பீச். உலகின் மிக நீண்ட நான்காவது கடற்கரை என்ற பெருமையை பெற்றது மெரினா பீச். அதேபோல் சென்னை என்றதும் பல சினிமாக்களில் காட்டப்படுவது சிவப்பு நிறத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும சென்ட்ரல் ரயில் நிலையம்.

    சென்னையில் எடுக்கப்படும் படங்கள்

    சென்னையில் எடுக்கப்படும் படங்கள்

    அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான மற்றொரு கட்டிடம் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கட்டிடம். சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இந்த இரண்டு கட்டடங்களையும் நிச்சயம் அறிமுக காட்சியிலேயே காண முடியும்.

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை

    வந்தாரை வாழ வைக்கும் சென்னை, சினிமா கனவுகளுடன் வரும் பலர் இளைஞர்களை இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும் ஜொளிக்க வைத்துள்ளது. பல சினிமாக்கள் சென்னையை கொண்டாடியுள்ளது.

    மே மாதம் படம்

    மே மாதம் படம்

    இந்நிலையில் சென்னை தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் சென்னையை கொண்டாடிய பாடல்களின் தொகுப்பை காணலாம். அந்த வகையில் 1994 ஆம் ஆண்டூ வெளியான படம் மே மாதம். வீனஸ் பாலு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வினீத், சோனாலி குல்கர்னி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்..

    மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்..

    இந்தப் படத்தில் இடம்பெற்ற மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் என்ற பாடல் பெரும் ஹிட்டானது. இந்தப் பாடலை ஷாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா, மனோரமா உள்ளிட்டோர் பாடியிருந்தனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலில் சென்னையின் பெரும்பாலான இடங்கள் காட்சியாக்கப்பட்டிருக்கும்.

    எங்க ஊரு மெட்ராஸு..

    எங்க ஊரு மெட்ராஸு..

    இதேபோல் 2014ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்த்தில் வெளியான மெட்ராஸ் படத்திலும் சென்னையின் பெருமையை பேசும் பாடல் இடம்பெற்றிருக்கும். கார்த்தி, கேத்தரின் தெரேசா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற சென்னை வட சென்னை.. எங்க ஊரு மெட்ராஸு.. இதுக்கு நாங்கதானே அட்ரஸு.. என்ற பாடல் பெரும் ஹிட்டானது. இந்த பாடல் சென்னையின் ஸ்பெஷாலிட்டிகளை வரிசைப்படுத்தியிருக்கும்.

    வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..

    வாம்மா துரையம்மா இது வங்கக்கரையம்மா..

    இதேபோல் 2010ஆம் ஆண்டு வெளியான மதராசப்பட்டினம் படத்திலும் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னை அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற வாம்மா துரையம்மா.. இது வங்கக்கரையம்மா என்ற பாடல் பெரும் ஹிட்டானது. இந்தப் பாடலை நா முத்துக்குமார் எழுதியிருந்தார். உதித் நாராயணன் மற்றும் கொச்சின் ஹனிஃபா இப்பாடலை பாடியிருந்தனர். இதில் சென்னை மதராசப்பட்டினமாக இருந்த போது அதன் அழகு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

    வணக்கம் வாழவைக்கும் சென்னை.. பிடிக்குதுன்னை.

    வணக்கம் வாழவைக்கும் சென்னை.. பிடிக்குதுன்னை.

    இதேபோல் 2012ஆம் ஆண்டு வெளியான மெரினா படத்திலும் சென்னையில் அழகை படம் பிடித்து காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஓவியா உள்ளிட்ட பலர் நடித்தனர். கிரிஷ் இசையில் வெளியான இப்படத்தில் வணக்கம் வாழவைக்கும் சென்னை, பிடிக்குதுன்னை.. உனக்கு ஈடு இல்லையே.. என்ற பாடலில் மெரினாவின் அழகு... சென்னை மக்கள் நெரிசல் என அனைத்தையும் கூறியிருப்பார் கவிஞர் நா முத்துக்குமார்.

    சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்

    சென்னை சிட்டி கேங்ஸ்டா பாடல்

    வணக்கம் சென்னை படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. ஷிவா, பிரியா ஆனந்த நடித்த இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார. இப்படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டா என்ற பாடல் இடம்பெற்றது. இதில் சென்னை வெர்சஸ் மும்பை என பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்/ இதனை இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா எழுதியிருந்தார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் பாடலை அனிருத்தும் ஹிப் ஹாப் தமிழாவும் இணைந்து பாடியிருந்தனர்.

    சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே..

    சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே..

    அடுத்ததாக 2004ஆம் ஆண்டு வெளியான படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் சென்னை செந்தமிழ் குறித்து பேசும் சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடலை நா முத்துக்குமார் எழுதியிருந்தார். ஹரிஷ் ராகவேந்திரா இப்பாடலை பாடியிருந்தார்.

    எங்க ஏரியா உள்ள வராத..

    எங்க ஏரியா உள்ள வராத..

    இதேபோல் 2006 ஆம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படமும் முழுக்க சென்னையை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடல் பெரும் ஹிட்டானது. இந்தப் பாடலை தனுஷ் மற்றும் பிரேம்ஜி பாடியிருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

    சென்னையின் அடையாளம் கானா பாடல்கள்

    சென்னையின் அடையாளம் கானா பாடல்கள்

    சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று கானா பாடல்கள். வட சென்னையில் பிரபலமான கானா பாடல்கள் பல படங்களில் இடம்பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே சென்னையில் கானா பாடல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது என்பது அண்மையில் வெளியான சார்பாட்டா பரம்பரை படத்தில் காட்டப்பட்டிருந்தது.

    English summary
    Tamil Cinema songs which talks about Chennai's special. Chennai celebrates its 382 birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X