ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்

எஸ்பி ராஜ்குமார் இயக்கியுள்ள சுறா, மலையாளத்தில் மோன்லால் நடிப்பில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவலாகும்.
தமிழுக்கு ஏறப சில மாற்றங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாம். தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன (அதே நேரம் இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தெலுங்கு பில்லாவில் இடம் பெற்ற ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் விஜய்யுடன் வடிவேலு வருவது போல காட்சிகள் அமைத்துள்ளாராம் இயக்குநர். இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் முதல் பெரிய படம் சுறாதான்.
Comments


Click it and Unblock the Notifications