twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நார்வே தமிழ் திரைப்பட விழா 2012... இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

    By Shankar
    |

    Norway Tamil Film Festival
    பொதுவாக ஒரு திரைப்பட விருது வழங்கும் விழா அல்லது சர்வதேச திரைப்பட விழா என்றால் அது பல விதங்களில் வளைந்து கொடுப்பதாகவே அமைந்துவிடும்.

    தெரிந்தவர், பிரபலம், வேண்டப்பட்டவர் என பல வெளியில் தெரியாத பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்படும் அல்லது படங்கள் தெரிவு செய்யப்படும்.

    ஆனால் இந்த மாதிரி நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாமல், படங்களை அதன் தரம் மற்றும் நடுவர்குழுவினரின் நேர்மையான விமர்சனங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யும் ஒரு விழா என்ற பெயரைப் பெற்றுள்ளது நார்வே தமிழ் திரைப்பட விழா.

    கடந்த ஆண்டு மூத்த இயக்குநர் ஒருவரின் பலத்த சிபாரிசில் இந்தியாவில் தேசிய விருதுகளைப் பெற்றது ஒரு படம். ஆனால் அதே படம் நார்வே திரைப்பட விழாவுக்கு வந்தபோது, எந்த சிபாரிசு, பின்னணி பற்றியும் கவலைப்படாமல், உண்மையில் அந்தப் படம் எதற்கு தகுதியோ அந்தப் பிரிவில் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட்டது. இந்த விழாவின் நேர்மைக்கு இதுவே சாட்சி என சக கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் சினிமாவின் இன்றைய மதிப்புக்குரிய படைப்பாளிகளான ஜனநாதன், மிஷ்கின், சசிகுமார், ராதா மோகன், சீனு ராமசாமி, பிரபு சாலமன், சமுத்திரக்கனி என பலரும் நேரில் பங்கேற்று பாராட்டு தெரிவித்த விழா நார்வே திரைப்பட விழா.

    இந்த ஆண்டு தனது 3 வது சர்வதேச தமிழ் திரைப்பட விழாவை நார்வேயின் ஆஸ்லோ மற்றும் லோரன்ஸ்கூ நகரங்களில் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடத்துகிறார்கள்.

    முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

    இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் தங்கள் படங்களை இந்த விழாவுக்கு அனுப்பி வைக்க இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் இந்த விழாவில் பங்கேற்பதற்கான படிவங்களை அனுப்பிவைத்துவிட வேண்டும்.

    இதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    "நல்ல படத்தை எடுத்தும், மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை உள்ள படைப்பாளிகளுக்கு ஒரு பெரிய மரியாதையை பெற்றுத் தரும் களமாக நார்வே தமிழ் திரைப்பட விழா அமைந்துள்ளது. இந்த விழாவுக்கு வரும் படங்களை, நார்வேயுடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகின் முக்கியமான சில திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்லும் திட்டமுள்ளது. இதன் மூலம் தமிழ்ப் படங்களின் வீச்சு சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும். வர்த்தக எல்லையும் விரியும். விழா குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்திலிருந்து தொடர்ந்து படைப்பாளிகள் பேசி வருகிறார்கள். மிகுந்த கவுரவத்துக்குரிய விருதாக தமிழர் விருது வடிவம் பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் மகிழ வைத்துள்ளது," என்றார் நார்வே தமிழ் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன்.

    நார்வே அரசின் ஆதரவுடன் இந்த விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. குறும்படங்களை அனுப்ப இன்னும் ஒரு மாதம் வரை அவகாசம் உள்ளது.

    விழாவில் பங்கெடுக்க விரும்பும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் www.ntff.no என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது [email protected]மின் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வசீகரன் தெரிவித்தார்.

    English summary
    Tamil directors and producers are showing great interest to participate in the 3rd annual Norway Film Festival 2012. The one and only film festival for Tamil films is going to happen on April 25-29 in Oslo, Norway.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X