நடிகனான இயக்குநரை கவுண்டமணி கலாய்த்த கவுண்ட்டரால் சத்யராஜ் சிரிக்க முடியாமல் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: நகைச்சுவை சக்கரவர்த்தி என்று அன்போடு அழைக்கப்படும் கவுண்டமணி அவர்கள் திரைத்துறையின் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட்டார்.

குறிப்பாக நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்துடன் அவர் சேர்ந்து நடித்த படங்களின் நகைச்சுவை காட்சிகள் எப்போது பார்த்தாலும் சிரிப்புக்கு கியாரண்ட்டி தரும்.

படத்தில் நடிப்பதை தாண்டி ஷூட்டிங் இடைவேளையின் போதும் கவுண்டமணி லொள்ளுடன்தான் செட்டில் அனைவரிடமும் பேசுவாராம்.

சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி

சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி இருவருமே கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள் என்பதால் குசும்பிற்கு பேர் போனவர்கள். ஒருமுறை சத்தியராஜ் எந்தப் பட வாய்ப்பு இல்லாமல் இயக்குனர் சீமான் இயக்கத்தில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தாராம் அவருக்கு பட வாய்ப்பு இல்லை என்பது கவுண்டமணிக்கு நன்றாக தெரியுமா அப்படி இருக்கையில் மாலை ஒரு இயக்குனர் கதை சொல்ல வருவதாக கூறியிருக்கிறார்.

சத்யராஜ் பந்தா

சத்யராஜ் பந்தா

அப்போது சீமானை அழைத்து, மாலை வேறொரு இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வருகிறார். அதனால் கொஞ்சம் படப்பிடிப்பை சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று தான் பந்தா பண்ணியதாகவும் அப்போது,"எப்படியும் அந்தப் படத்தை ஒப்புக்கொள்ளப் போகிறாய். அதை விட்டால் வேறு படம் உனக்கு கிடையாது. கதை சொல்ல வருபவரை அறைக்குள் அடைத்து தாழ்ப்பாள் போட்டு கதையை கேட்டு நடிக்க சம்மதிக்கத்தான் போகிறாய், எதற்கு இந்த வெட்டி பில்டப்" என்று தன்னை கலாய்த்ததாக சத்யராஜ் கூறியிருக்கிறார்.

பொள்ளாச்சியில் பொளக்கப்பட்ட இயக்குநர்

பொள்ளாச்சியில் பொளக்கப்பட்ட இயக்குநர்

அதே போல் ஒரு முறை பொள்ளாச்சியில் ஒரு படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருந்ததாம். பல படங்களை இயக்கிய ஒரு இயக்குனர்தான் அந்த படத்தில் கதாநாயகனாக மாறி நடித்துக் கொண்டிருந்தாராம். இவர்கள் செட்டுக்கு வந்தவர் இவர்களை பார்த்தவுடன் வெட்கப்பட்டு நின்றாராம். காரணம் அவர் அந்த இடத்தை விட்டு போனால் இவர்கள் இருவரும் கிண்டல் செய்வார்கள் என்று நன்கு அறிந்து கூச்சப்பட்டு பேசினாராம். அப்போது,"தான் ஒரு பள்ளிக்குச் சென்றதாகவும் அங்கிருந்த குழந்தைகள் நீங்களே அழகா இருக்கீங்க ஏன் ஹீரோவா நடிக்க கூடாது" என்று கேட்டதால் தான் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று அந்த இயக்குநர் சொல்லிய அடுத்த கணமே,"அது பிளைண்ட் ஸ்கூலா இருக்கும்பா" என்று கவுண்டமணி கவுண்டர் போட்டாராம்.

எழுந்து ஓடிய சத்யராஜ்

எழுந்து ஓடிய சத்யராஜ்

சிரிப்பை அடக்க முடியாத சத்யராஜ் அந்த இயக்குநருக்கு முன்பு சிரித்து விடக்கூடாது என்பதற்காக சிறுநீர் கழிக்க போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்று வேறு ஒரு இடத்தில் சிரித்ததாக சத்யராஜ் ஒரு நிகழ்வில் கூறியிருக்கிறார். சினிமாக்காரர்களை தாண்டி அரசியல்வாதிகளை கூட இவர்கள் விட்டு வைத்ததில்லையாம். அவர்கள் முன்னே அவர்களை கலாய்த்ததாகவும் ஆனால் கவுண்டமணி சத்யராஜ் என்ற காரணத்தினால் அவர்களும் சிரித்துக் கொண்டே அதனை ரசிப்பார்கள் என்றும் பல சம்பவங்களை சத்யராஜ் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X