twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேள்வி கேட்ட இயக்குநர் அதிரடி நீக்கம்... இது டைரக்டர் சங்க கலாட்டா!

    By Staff
    |

    Velmurugan
    தங்கள் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்ட வேல்முருகன் என்ற இயக்குநரை சங்கத்திலிருந்தே அதிரடியாகத் தூக்கிவிட்டனர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜாவும், செல்வமணியும் என்ற குற்றச்சாட்டுதான் இப்போதைய கோடம்பாக்க பரபரப்பு.

    இதன் பின்னணி பற்றி விசாரித்தோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி கோஷ்டியை எதிர்த்து தேர்தலில் நின்றவர் வேல்முருகன். ஆட்டோகிராப்பில் பிரதான காமெடியன் போல வந்தவர். இப்போதும் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். ஒரு படத்தையும் இயக்கி இருக்கிறார். மருதாச்சலம் என்ற படம் இப்போது இவரது இயக்கத்தில் உருவாகி வருகிறது.

    இந்த நிலையில் இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கல்தா கொடுத்து அவரது எதிர்காலத்துக்கே உலை வைத்திருக்கிறது சங்கம்.

    எதனால் இந்த நீக்கம்?

    கடந்த வாரம் இந்த சங்கத்தின் சார்பாக நடந்த பொதுக்குழுவில் ஒரு துண்டு பிரசுரத்தை விநியோகித்தாராம் வேல்முருகன். அதில்,

    பதவிக்கு வந்து 100 நாட்களில் செய்வேன் என்று உறுதியளித்த திட்டங்களும் வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளதே, எப்போது நிறைவேற்றுவீர்கள்?

    உங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் தேர்வு செய்தோம். நீங்களோ அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு கேட்டு சங்கத்தின் இமேஜை டேமேஜ் செய்கிறீர்கள்?

    தமிழ் ஈழப் பிரச்சினையை உங்கள் தனிப்பட்ட செல்வாக்குக்காகப் பயன்படுத்திவிட்டீர்கள்..., என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தாராம் வேல் முருகன். இதுதான் பாரதிராஜாவையும் செல்வமணியையும் கோபத்தின் உச்சிக்கே போக வைத்துவிட்டதாம்.

    உடனே ஒரு இயக்குநரை விட்டு தீர்மானத்தை கொண்டு வந்து வேல்முருகனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியிருக்கிறாரகள்.

    "இப்படி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் முன் விளக்கம் தரக் கூட எனக்கு அவகாசம் கொடுக்கவில்லை. முறையான அறிவிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் போல இஷ்டத்துக்கும் முடிவு எடுத்தால் எப்படி? சங்கத்துக்கு நான் உறுப்பினர் மட்டும்தான்... சங்க நிர்வாகிகளுக்கு அடிமையல்ல.

    இப்படி நடவடிக்கை எடுத்ததன் மூலம் எனக்கு படங்கள் கிடைக்காமல் செய்து வாழ்வாதரத்தை பறிக்க இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கோர்ட்டுக்குப் போய் விட்டார் வேல்முருகன்.

    பாரதிராஜா, செல்வமணி இருவருக்கும் ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். தனக்கு ஆதரவான இயக்குனர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்துகிறார்.

    இயக்குநர்கள் சங்கம் இதுபற்றி எந்த விளக்கமும் தர இதுவரை முன்வரவில்லை.

    நியாயம் ஜெயிக்கும், அது யார் பக்கமிருந்தாலும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X