twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ட்வெண்டியத் பாக்ஸ் செஞ்சுரியுடன் கைகோர்க்கும் முருகதாஸ்!

    By Sudha
    |

    A.R.Murugadoss
    ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்வென்டியத் பாக்ஸ் செஞ்சுரியுடன் இணைந்து புதிய படங்கள் தயாரிக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார் ஏ ஆர் முருகதாஸ்.

    ஆனால் இந்தப் படத்தை அவர் இயக்கப் போவதில்லை. அவரிடம் உதவியாளராக இருந்த சரவணன் இயக்குகிறார்.

    ஆண்டுக்கு இரு படங்களை இந்த நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாராம் முருகதாஸ்.

    திறமையுள்ள இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாகவும், தேவைப்பட்டால் தானும் படத்தை இயக்கப் போவதாகவும் முருகதாஸ் கூறியுள்ளார்.

    தற்போது ஏழாம் அறிவு எனும் படத்தை இயக்கி வரும் முருகதாஸ், அந்தப் படம் முடிந்த கையோடு இந்த புதிய தயாரிப்பு நிறுவனம் பற்றி அறிவிக்கப் போகிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X