twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஹா.. ஏன் இப்படி? தெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்!

    By
    |

    சென்னை: தெலுங்கு சினிமாவில் வில்லனாக நடிக்க, தமிழ் ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவில் இந்தியில் இருந்து வில்லன்களை இறங்குமதி செய்வது ஒரு காலத்தில் அதிகரித்திருந்தது. அதில் ஒருவர் சலீம் கவுஸ். சென்னையை சேர்ந்த இவர், இந்தியில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்தார்.

    கமல்ஹாசனின் வெற்றிவிழா மூலம் தமிழுக்கு வந்தார். தொடர்ந்து பல படங்களில் தனது குரலாலும் முரட்டு லுக்காலும் வில்லனாக மிரட்டினார். கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலும் நடித்திருந்தார் இவர்.

     வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு! வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு!

    அதுல் குல்கர்னி

    அதுல் குல்கர்னி

    ஆசிஷ் வித்யார்த்தி, மகேஷ் திவாரி, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் உட்பட பல இந்தி நடிகர்கள், தமிழில் வில்லனாக நடித்தார்கள். நடிக்கிறார்கள். அஜித்தின் விவேகம் படத்தில், இந்தி ஹீரோ விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். தர்பாரில் இந்தி ஹீரோ சுனில் ஷெட்டி, வில்லன்.

    ஜெகபதிபாபு

    ஜெகபதிபாபு

    தெலுங்கில் இருந்து ராமி ரெட்டி இங்கு வில்லனாக மிரட்டினார். பிறகு சில நடிகர்கள் வந்தார்கள், சென்றார்கள். இப்போது ஜெகபதிபாபு, வம்சி கிருஷ்ணா உட்பட சிலர் வில்லனாக நடித்து வருகிறார்கள்.

    தெலுங்கிலும்

    தெலுங்கிலும்

    இதே நிலைதான் தெலுங்கு சினிமாவிலும். அங்கும் இந்தியில் இருந்துதான் வில்லன்களை அதிகமாக இறக்குமதி செய்து வந்தனர். போரடித்துவிட்டதோ என்னவோ, இப்போது தமிழ் சினிமாவில் இருந்து, ஹீரோக்களை வில்லனாக்கி வருகின்றனர்.

    அருண் விஜய், ஆர்யா

    அருண் விஜய், ஆர்யா

    நடிகர் அருண் விஜய், தமிழில் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்து தெலுங்கில் புரூஸ்லீ படத்தில் ராம் சரணுக்கு வில்லன் ஆனார். நடிகர் ஆர்யா, வருடு என்ற தெலுங்கு படத்தில், அல்லு அர்ஜுனுக்கு வில்லன் ஆனார்.

    சமுத்திரக்கனி

    சமுத்திரக்கனி

    கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான, அல்லு அர்ஜூனின், 'அல வைகுந்தபுரமுலு' படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹா, இப்போது ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா படத்தில் வில்லனாக நடித்துவருகிறார்.

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி, வில்லனாக நடிக்க இருக்கிறார். தமிழ் ஹீரோக்கள் தெலுங்கில் வில்லனாக நடிக்க என்ன காரணம்?

    பவர்புல் கேரக்டர்

    பவர்புல் கேரக்டர்

    ''பொதுவாக தெலுங்கு சினிமாவில் வில்லன் கேரக்டர்கள் பவர்புல்லாக இருக்கும். ஹீரோவுக்கு இணையாகவே இருக்கும். அதனால் ஹீரோவுக்கு ஏற்ற ஒருவரை வில்லனாக்கினால்தான் அந்த கேரக்டர் தாங்கும்.

    பாகுபலி ராணா

    பாகுபலி ராணா

    'பாகுபலி'யையே எடுத்துக்கொண்டால் கூட, ஹீரோ பிரபாஸூக்கு இணையான வேடம், ராணாவுக்கு. அதனால்தான் ரசிக்க முடிந்தது. இதனால் மற்ற மொழி ஹீரோக்களை தெலுங்கு சினிமாவில் வில்லனாக்கி வருகிறார்கள். அதற்கு, அவர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்கிறார்கள்.

    தமிழில் 8, தெலுங்கில் 10

    தமிழில் 8, தெலுங்கில் 10

    இப்போது விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.8 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. ஆனால், தெலுங்கில் ரூ.10 கோடி கொடுக்க முன் வந்திருக்கிறார்கள். இதைத்தாண்டி, தெலுங்கு ரசிகர்களிடமும் தமிழ் ஹீரோக்களுக்கு அறிமுகம் கிடைக்கிறதே...' என்கிறார் இயக்குனர் ஒருவர்.

    English summary
    Tamil heroes doing villain roles in Telugu cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X