'சிந்து சமவெளி'யின் ஏடாகூட கதை!

சாமி இயக்கிய உயிர் படத்தில் கொழுந்தனார் மீது மோகம் கொண்டு கட்டிய கணவரையே கொல்லத் துணியும் அண்ணி கதையை சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். நாட்டில் இல்லாததை நான் சொல்லவில்லை என்று அதற்கு விளக்கமும் அளித்தார்.
பின்னர் மிருகம் என்ற இன்னொரு வித்தியாசமான படத்தைக் கொடுத்தார் சாமி. தற்போது அவர் இயக்கியிருக்கும் சிந்து சமவெளி படத்திலும் ஏடாகூடமான கதையை கையாண்டுள்ளாராம் சாமி.
இப்படத்தில் மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே காதல் மலருகிறதாம். இந்தக் காதலுக்கான காரணத்தையும், சூழலையும் பார்த்தால் யாரும் அதைத் தவறான காதல், கள்ளக்காதல் என்று கூற முடியாது. அந்த அளவுக்கு லாஜிக்கை சரியாக வைத்திருக்கிறாராம் சாமி.
இந்தப் படமும் உயிரைப் போல எதிர்ப்புகளை வாரிக் கட்டிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
More from Filmibeat
amali paul anaka அனகா அமலி பால் இயக்குநர் சாமி உயிர் சிந்துசமவெளி மருமகள் மாமனார் daughter in law director samy father in law sindhu samaveli


Click it and Unblock the Notifications











