twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் பலான படங்களை தூசு தட்டும் திரையரங்குகள்...!

    By Shankar
    |

    இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மலையாள பிட்டு படங்கள் மற்றும் ஷகிலாவின் பலான பட மோகத்திலிருந்து மீண்டு வந்தது தமிழக திரையரங்குகள். குறிப்பாக புறநகர்ப் பகுதி திரையரங்குகள்.

    ஆனால், உலகக் கோப்பை கிரிக்கெட், தேர்வுகள் மற்றும் தொடர்ந்து வெளியாகும் அடாசு படங்கள் காரணமாக, மீண்டும் பழைய பிட்டு படங்களை தூசி தட்டி, புதிய தலைப்புக்களுடன் புது போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்துள்ளனர்.

    இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இப்போதும் சி கிரேடு செக்ஸ் படங்கள் தயாராகின்றன. இவற்றில் வேண்டிய இடத்தில் பிட்டை சொருகி ஓட்டிக் கொள்வார்கள். இப்போது அந்தப் படங்களை அதிகமாக தேடிப் பிடித்து வாங்குகின்றன திரையரங்குகள்.

    இப்போது தப்பு, தேவதாசியின் காதல் உள்ளிட்ட சில படங்கள் ஏ சான்றிதழுடன் வெளியாகியுள்ளன.

    இவை தவிர, மலையாளப் படம் என்ற பெயரில் அம்முகுட்டி, காதல் ரகசியங்கள் என்றெல்லாம் தலைப்பிடப்பட்டு பல படங்கள் புரநகர்ப் பகுதிகளில் வெளியாகியுள்ளன.

    "புதிய படங்களைப் போட்டாலும் பார்க்க ஆளில்லை. ஆட்களை இழுக்கும் அளவுக்கு சரக்கோடு படமெடுப்பதும் இல்லை. தினமும் 80 சதவீத காலி இருக்கைகளுடன் ஷோ ஓட்ட முடியாத நிலை. எங்களுக்கு இப்போது இந்தப் படங்கள்தான் கை கொடுக்கின்றன. முதலீடும் குறைவு. தியேட்டரைக் காப்பாற்றுமளவு வருவாய் வருகிறது," என்கிறார் ஒரு தியேட்டர்காரர்.

    படைப்பாளிகள் கவனிப்பார்களா...?

    English summary
    Cricket and examinations have kept away the youth audiences from the cinemas. Added to that, Tamil cinema content has been bad. Now most of the theaters are showing 'A' films, which are dubbed from other languages.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X