»   »  மிரட்டல் வழக்கில் தனுஜா-தலைமறைவு

மிரட்டல் வழக்கில் தனுஜா-தலைமறைவு

Subscribe to Oneindia Tamil

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய தோழியாக கூறப்பட்ட நடிகைதனுஜா, விதவைப் பெண்ணை மிரட்டி ரூ. 40 லட்சம் மதிப்புள்ள சொத்தைப் பிடுங்கமுயற்சித்தாக புகார் எழுந்துள்ளது.

ஒரிரு படங்களில் நடித்தவர் தனுஜா. சில தொலைக்காட்சித் தொடர்களிலும்தலையைக் காட்டியுள்ளார். அண்ணா நகரில் வசித்து வரும் தனுஜா, கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பெயரைச் சொல்லி பேராட்டம் ஆடிவந்தார்.

நடிகர் குணாலுக்கும், தனுஜாவுக்கும் இடையே நெருங்கிய காதலும் பூத்தது.இருவரும் ஹோட்டல் அறையில் ஒன்றாகத் தங்கி பரபரப்பையும் ஏற்படுத்தினர்.அதன் பிறகு குணாலை கட் பண்ணி விட்டார் தனுஜா.

சில மாதங்களுக்கு முன்பு திரைப்படத் தயாரிப்பாளர் குந்தன்ஷா மீது தனுஜா புகார்கொடுத்தார். தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். ஆள் வைத்துமிரட்டுகிறார் என்று தனுஜா புகார் கொடுத்த குந்தன்ஷாவை போலீஸார் அள்ளிச்சென்று உள்ளே போட்டனர்.

தனுஜாதான் தன்னை ஏமாற்றி பல லட்சம் பணத்தைக் கறந்து விட்டார் என குந்தன்ஷாகூறிய புகார் கேட்பாரின்றி போய் விட்டது. அப்போது அதிமுக ஆட்சி என்பதுநினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தனுஜா மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்ணா நகர்மேற்கில் உள்ள சாந்தம் காலனியில் வசித்து வரும் லட்சுமி என்பவர் தனுஜாவிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதற்கு வட்டியும் கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் லட்சுமியின் கணவர் முரளி திடீரென மரணம் அடைந்தார்.இதனால் லட்சுமியால் வட்டிப் பணத்தைக் கட்ட முடியவில்லை. இதைத் தொடர்ந்துலட்சுமியை மிரட்டி தனுஜா, வட்டிக்கு மேல் வட்டியைப் போட்டு ரூ. 40 லட்சம் தரவண்டும் என லட்சுமியை மிரட்ட ஆரம்பித்தார்.

அதிர்ந்து போன லட்சுமி இதைத் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்ததனுஜா 40 லட்சம் பணத்தைக் கொடு இல்லாவிட்டால் அந்தப் பணத்திற்குப் பதில்வீட்டை எனக்கு எழுதிக் கொடுத்து விடு என லட்சுமியை மிரட்டினார்.

இதற்கு லட்சமி பணிய மறுத்தார். இதையடுத்து அடியாட்களுடன் லட்சுமி வீட்டுக்குச்சென்ற தனுஜா அங்கு தனியாக இருந்த லட்சுமியை மிரட்டியுள்ளார். அடிக்கவும்செய்துள்ளார்.

அவர்களிடமிருந்து தப்பிய லட்சுமி நேராக திருமங்கலம் காவல் நிலையத்துக்குஓடினார். அங்கு தனுஜா மீது புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணைநடத்தினர். அதில், லட்சுமியை தனுஜா 40 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து தனுஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதை அறிந்ததனுஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.பொங்கலையொட்டி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் இன்றைக்குள்தனுஜாவை கைது செய்ய போலீஸார் தீவிரமாக உள்ளனர்.

இதனால் தனுஜா தலைமறைவாகி விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil