»   »  காருக்குள் கசமுசாதப்பிப் பிழைத்த தனுஜா!

காருக்குள் கசமுசாதப்பிப் பிழைத்த தனுஜா!

Subscribe to Oneindia Tamil

குடிபோதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற மூன்று பேரிடமிருந்து நடிகை தனுஜா தப்பிப் பிழைத்து போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது புகாரை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதால், 3 பேரையும் போலீஸார் அனுப்பி வைத்து விட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஜா. சட்டப் படிப்பு படித்தவரான தனுஜா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு பட தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் குறித்து பரபரப்பு புகார் கொடுத்தவர்.

ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரது சர்ச்சை செயல்பாடுகள் காரணமாக யாரும் பட வாய்ப்புகள் தரவில்லை. இதனால் நடிகை என்ற நிலையிலிருந்து துணை நடிகையாக மாறினார் தனுஜா.

எப்போதும் ஆண் நண்பர்களுடன்தான் சுற்றுவார் தனுஜா. வார இறுதியில் அவரை ஏதாவது ஸ்டார் ஹோட்டலில் பார்க்கலாம். ஆண்கள் புடை சூழ தடபுடலாக விருந்து, கொண்டாட்டம் என கும்மாளமாக இருப்பாராம் தனுஜா.

இந்த நிலையில் இவரது ஆண் நண்பரான வினோத் மற்றும் வினோத்தின் நண்பர்களான ஜெயக்குமார், கார்த்திக் ஆகியோருடன் வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போயுள்ளார் தனுஜா.

அங்கு மது விருந்தில் மூன்று பேரும் விடிய விடிய திளைத்தபடி இருந்தனர். அதிகாலையில் தனுஜாவுக்குப் பசி எடுத்துள்ளது. ஆனால் அந்த ஹோட்டலில் சாப்பாடு இல்லாததால், காரை எடுத்துக் கொண்டு வேறு ஒரு ஹோட்டலுக்குக் கிளம்பியுள்ளனர்.

காலை 5 மணியளவில் அவர்களது கார் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நால்வருக்குள்ளும் பிரச்சினை உருவானது. இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து தனுஜாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க கடுமையாக போராடியுள்ளார் தனுஜா.

இதனால் காருக்குள் பெரும் அடிதடி நடந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் இதைப் பார்த்து விட்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். காருக்குள் கட்டிப்புடி சண்டையில் ஈடுபட்டிருந்த அவர்களை வெளியே கொண்டு வந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு போய் விசாரணை நடத்தியபோதுதான் அவர் தனுஜா என்பது தெரிய வந்தது. அந்த மூன்று வாலிபர்களும் தொழிலதிபர்களின் மகன்கள் என்பதும் தெரிந்தது.

அந்த மூன்று பேர் மீதும் தன்னைக் கற்பழிக்க முயன்றதாக போலீஸில் புகார் கொடுத்தார் தனுஜா. இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஆனால் திடீரென தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக தனுஜா கூறவே போலீஸார் கடுப்பாகி விட்டனர். தனுஜாவை கடுமையாக எச்சரித்து இதுபோல இனிமேல் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறிய அவர்கள் அந்த மூன்று வாலிபர்களையும் எச்சரித்து வெளியே அனுப்பி விட்டனர்.

தனுஜாவிடம் சண்டை போட்ட 3 வாலிபர்களும் சென்னை நகரின் மிகப் பெரும் தொழிலதிபர்களின் வாரிசுகளாம். அதனால்தான் தனுஜா தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil