»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தாரிகா ஹீரோயின் ஆகும் ஆசையுடன் தான் சினிமாவுக்கு வந்தார். கன்னடத்தில் பலான ரேஞ்ச் படங்களில்நடித்தார். கன்னட டிவிக்களின் மிட் நைட் மசாலாவில் தாரிகாவுக்கு தினமும் இடமுண்டு.

இந் நிலையில் தமிழில் கால் பதிக்க வந்தார். சினிமா பார்ட்டிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தும், ஹீரோயின் சான்ஸ்ஒத்து வரவில்லை. இதனால் சில சிங்கிள் பாடல் டான்ஸ்களை ஆடிவிட்டு சித்தி சீரியல் மூலம் டி.வியில் செட்டில்ஆக முயன்றார்.

அப்போது தான் பாரதிராஜா கண்ணில் இவர் பட, ஈர நிலம் படத்தில் கண்டாங்கி புடவையை சுத்திவிட்டு,இரண்டாவது ஹீரோயினாக்கினார். படம் படுதோல்வி கண்டது. இதனால் அதில் நடித்த யாருக்கும் பிரேக்கிடைக்கவில்லை.

ஆனால். தாரிகாவுக்கு மட்டும் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு வந்தது.அதை நன்றாகவே பயன்படுத்தி வெயிட்டான ஆட்டம் போட்டார். இதனால் மேலும் சில சிங்கிள் டான்ஸ்களுக்குஅழைப்பு வந்துள்ளது.

இந் நிலையில் அவரே எதிர்பாராத விதமாக இரண்டு படங்களில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ளார். சுபம்என்ற படத்தில் அபிநய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் தாரிகாவைப் போட்டதே எக்ஸ்போஸ்செய்யத் தான் என்பதால், அதை உணர்ந்து நன்றாகவே நடிக்கிறாராம். ஒரு மழைப்பாட்டும் சேர்த்துவிட்டார்கள்.

அதேபோல ஸ்கூல் என்ற படத்திலும் ஹீரோயினாக்கப்பட்டுள்ளார் தாரிகா. இதில் ஹூரோ சிலம்பு.எஸ்.சுரேஷ்என்ற புதுமுகம். இவர் சிலம்பாட்டம் மற்றும் வர்மக்கலை நிபுணராம். களறியிலும் கில்லாடியாம்.

இவ்வளவு விஷயங்கள் வைத்துள்ளவருக்கு ஒரு ஹீரோயின் போதுமா?. போதாது என்பதால் தாரிகாவுடனஅட்சயா, பார்வதி என் மேலும் இரண்டு கவர்ச்சி குண்டுகளையும் இறக்கிவிட்டுள்ளார்கள்.

மாஜி ஹீரோயின் அம்பிகாவும் இதில் செக்ஸி ஆண்டியாக நடிக்கிறார். மேலும் செளம்யா, ரெளசிமா எனபெண்கள் பட்டாளம் படத்தில் நீண்டு கொண்டே போகிறது.

இவர்களில் தாரிகாவின் கவர்ச்சிக்குத் தான் ஹைலைட் தந்து படத்தை எடுக்கப் போகிறார்களாம். இதனிடையேதான் புறப்பட்டு வந்த கன்னட உலகில் இருந்தும் தாரிகாவுக்கு மீண்டும் அழைப்பு வந்துள்ளது. அங்கு சமீபத்தில்இவர் கலைச் சேவை புரிந்த ஒரு படத்துக்கு ஏக ரெஸ்பான்ஸ். இதனால் அங்கிருந்தும் ஏகத்துக்கும் சான்ஸ்கள்.

உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார் தாரிகா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil