»   »  கலக்க வரும் நடிகை!

கலக்க வரும் நடிகை!

Subscribe to Oneindia Tamil

வராத படங்களில் நிறைய நடித்துள்ள பெருமைக்குரிய பாபுகணேஷ் நடிகை என்றபெயரில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். மறைந்த கவர்ச்சி பிளஸ் கலக்கல்நடிகைகளின் கதையைப் பின்னணியாகக் கொண்ட படமாம் இது.

தமிழ் சினிமாவில் பாபு கணேஷ் பெயர் அவ்வப்போது அடிபடும். ஒன்று அவரதுபுதிய படம் பற்றிய அறிவிப்பாக இருக்கும். இல்லாவிட்டால் ஏதாவது ஏடாகூடசர்ச்சையாக இருக்கும்.

பாபு கணேஷ் நிறையப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் தியேட்டரை எட்டிப்பார்த்த படங்கள் மிகவும் குறைவு. இப்போது தனது திரைப்புலி டாட் காம் நிறுவனம்சார்பாக நடிகைகள் என்ற பெயரில் புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார்பாபுகணேஷ்.

இதுவரை தமிழ் சினிமாவில் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போன நடிகைகள்குறித்த கதையாம் இது. சில்க் ஸ்மிதா, திவ்ய பாரதி, மோணல், பிரதியுக்ஷா, ஷோபா,படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட மறைந்த நடிகைகள் குறித்து இப்படத்தில்விவரிக்கவுள்ளாராம் பாபுகணேஷ்.

இதிலும் வழக்கம் போல பாபு கணேஷ்தான் ஹீரோ. வடிவேலு இன்னொருஹீரோவாம். ஹீரோயினாக நடிப்பவர் தேஜாஸ்ரீ. இவர்கள் தவிர அந்தக்காலத்தில்சிவாஜியுடன் இணைந்து நடித்த இலங்கை நடிகையான மாலினி பொன்சேகராவும்இப்படத்தில் தலை காட்டுகிறார்.

இவர்கள் தவிர அபிநயஸ்ரீயும் படத்தில் உள்ளார். தேஜா ஸ்ரீக்கும், அபிநயஸ்ரீக்கும்இதில் கிளாமரான வேடங்களாம். அதாவது சில்க் ஸ்மிதா வேடத்தில் தேஜாஸ்ரீயும்,திவ்யபாரதி வேடத்தில் அபியும் அசத்தவுள்ளனராம்.

ஒரிஜினல் நடிகைகளை விட இவர்கள் இருவரும் படு கிளாமராகநடிக்கவுள்ளார்களாம். படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம், இசை,இயக்கம் எல்லாவற்றையும் பாபு கணேஷே பார்த்துக் கொள்ளவுள்ளாராம்.

ஜனவரி 1ம் தேதி படப்பிடிப்பை தொடங்கி சென்னை, கோவா, இலங்கை, புதுவை,கனடாவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளாராம் பாபு கணேஷ். மே மாதம் திரைக்குவரும் என்று கூறியுள்ளார். ஆனால் எந்த ஆண்டு மே மாதம் என அவர்சொல்லவில்லை.

ஏற்கனவே மும்தாஜை வைத்து அவரது பெயரிலேயே ஒரு படத்தை எடுத்து வந்தார்பாபு கணேஷ். ஆனால் படம் முடிவதற்குள் மும்ஸுடன் லடாய் ஏற்படவே, மும்ஸைதூக்கி விட்டு கும்தாஜ் என்ற கும்மாங்குத்து அழகியை கூட்டி வந்து படத்தை எடுத்தார்.படமும் போணியாகவில்லை, கும்மும் கரையேறவில்லை.

இப்போது மறைந்த நடிகைகள் குறித்தப் படத்தை தனது பாணியில் பசுமையாகஎடுக்கவுள்ளார் பாபுகணேஷ். இந்தப் படமாவது தேறுமா என்பது தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil