»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக் காலம் படத்தில் தேஜாஸ்ரீ போட்டுள்ள ஆட்டம் ஏ கிளாஸ் என்கிறார்கள். அத்தனை ஜூடு...

ப்ரியா மணி- தனுஷை வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் தேஜாஸ்ரீயின் டான்ஸ் வலிந்து கோர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த டான்ஸ் சீக்வென்ஸ் சமீபத்தில் விசாகபட்டிண கடலோரத்தில் படமாக்கப்பட்டது.

தேஜாஸ்ரீயுடன் புதுமாப்பிள்ளையான தனுஷ் மணலில் உருண்டு புரண்டு விளையாட வேண்டிய காட்சி. இதை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் கூடிவிட,வெட்கத்தையும் உடைகளையும் களைந்து கடலில் தூக்கிப் போட்டுவிட்டு கலக்கியிருக்கிறார் தேஜாஸ்ரீ.

ஆனால், புதுசா கல்யாணமானதாலோ என்னவோ தனுசிடம் எப்போதும் இல்லாத கூச்சம் வெளிப்பட, டேக் மேல் டேக் வாங்கினாராம். இதனால் மீண்டும்மீண்டும் இருவரும் கடல் அலைகளுடன் போட்டி போட்டிக் கொண்டு உருள வேண்டி வந்துள்ளது.


கூடியிருந்த கூட்டம் கைதட்டி உற்சாகப்படுத்த தேஜாஸ்ரீ உற்சாகமாகிப் போய் தனுஷை உண்டு இல்லை ஆக்கிவிட்டாராம்.

சுடச் சுட இந்த ஈர மணல் பாடலை எடுத்துவிட்டு வந்திருக்கிறது இது ஒரு கனாக் காலம் பட யூனிட்.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு பரபரப்பாகிக் கொண்டிருந்த பாலுவை தள்ளிக் கொண்டுபோய், உங்க படத்திலுமா இப்படி ஒரு கட்டிப்புடி டான்ஸ் என்று என்றுடென்சனுடன் கேட்டபோது,

அடுத்தவரின் பணத்தில் படம் எடுக்கிறபோது சில கமர்ஷியல் விஷயங்கள் அத்தியாவசியம் தானே.. இதனால் இப்படி ஒரு ஆட்டத்தைத் தவிர்க்க முடியவில்லைஎன்று நிதானமாய் பதில் தந்துவிட்டு, படத்துல ஆபாசமா எல்லாம் தெரியாது.. அப்படியெல்லாம் நான் விட்டுருவேனா என்றார்.

ஜேதாஸ்ரீயைப் பொறுத்தவரை எப்படியும் நடிக்கத் துணிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. தமிழிலும் தெலுங்கிலும் காற்றுள்ளபோதே மொத்தமாய் தூற்றிக்கொள்ளும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஒரு ஒரு பாட்டோ, ஒரே ஒரு காட்சியோ துட்டு வந்தால் சரி என்று லெவலில் டைரக்டர் சொன்னதைக் கேட்டு, கேமராவுக்கே குளிர் ஜூரம் வரும் அளவுக்கு90 சதவீதம் வரை உடைக் களைப்பு செய்து கொண்டிருக்கிறார்.

அப்படியே சைடில் என் கண்ணில் ஏன் விழுந்தாய் என்ற படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். சொல்லி அடிப்பேனில் செகண்ட் ஹீரோயின். வழக்கமாகஹீரோயினாக நடிப்பவர்கள், அவ்வப்போது ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார்கள். தேஜாஸ்ரீ விஷயத்தில் அதுவும் தலைகீழ்.


கைமேல் காசு கொடுத்தால் துக்கடா ரோல்களுக்கே முக்கியத்துவம் தருகிறார். ஹீரோயின் வாய்ப்புக்களை இரண்டாம்பட்சமாகவே ட்ரீட் பண்ணுகிறார்.

ஹீரோயினாக நடிக்க அதிக டேட்ஸை தந்துவிட்டு, படம் முடிந்த பிறகும் காசு கேட்டு அலையனும். இந்த சைடு கேரக்டர்களில் சிரமம் அதிகமில்லை. அதிகபட்சம்3 நாள் சூட்டிங், கையில இன்ஸ்டன்ட் காசு... இது தான் காரணமாம்.

இதனால் மாதம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஊர் ஊராகப் பறந்து போய் கலைச் சேவை செய்து கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil