»   »  "நல்ல பிள்ளை" தேஜாஸ்ரீ!

"நல்ல பிள்ளை" தேஜாஸ்ரீ!

Subscribe to Oneindia Tamil

நல்ல பொண்ணு என்ற பெயரை கோலிவுட்டில் படு வேகமாகப் பெற்று வருகிறார் தேஜாஸ்ரீ.

சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா என்ற குத்தாட்டப் பாட்டு மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் தேஜாஸ்ரீ. ஆந்திர வரவான தேஜாஸ்ரீ அடுத்த சிலுக்கு என்றுகூறப்படும் அளவுக்கு இப்போது படு வேகமாக முன்னேறி வருகிறார்.

கதாநாயகி கனவோடு தமிழ் சினிமாவுக்கு வந்த தேஜாஸ்ரீ முதல் படத்திலேயே குத்துப் பாட்டுக்கு ஆடியதால் தொடர்ந்து குத்தாட்டம் போடவே அழைப்புகள் வந்தன. இதனால் வெறுத்துப்போன தேஜாஸ்ரீ, சாரி, நான் ஹீரோயினாக்கும் என்று கூறி வந்த வாய்ப்புகளை ஒதுக்க ஆரம்பித்தார்.

கொஞ்ச நாள் காத்திருப்புக்குப் பின்னர் அந்த நாள் ஞாபகம் படத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்தோ பரிதாபம், படம் ஓடவில்லை. இருந்தாலும் தேஜாஸ்ரீ விரக்தியாகிவிடவில்லை.

வர்ற வாய்ப்புகள் வரட்டும் என்று முடிவு செய்து தன்னைத் தேடி வந்த அத்தனை வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார். அத்தோடு நில்லாமல் கலை நிகழ்ச்சிகள், கோவில்விழாக்களிலும் ஆடத் தொடங்கினார்.

தேஜாஸ்ரீயின் இந்த முடிவால் கல்லாப் பெட்டி நிறையத் தொடங்கியது. அத்தோடு அவருக்கு இப்போது வேறு ஒரு பெயரும் கிடைத்துள்ளது. நல்ல பொண்ணு என்ற பெயர்தான் அது.

கோலிவுட்டில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை என்ற பெயரைப் பெற ரொம்பவே பிராயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒன்னும் செய்யாமலேயே அந்தப் பெயரை எளிதாகதட்டிக் கொண்டு விட்டார் தேஜாஸ்ரீ.

ஷூட்டிங்குக்கு தாமதமாக வருவதில்லை, சம்பளத்தை கட் அண்ட் ரைட்டாக கேட்பதில்லை, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறார், அது வேண்டும், இது வேண்டும் என்று அடம்பிடிப்பதில்லை, தன்மையாக பழகுகிறார், அடுத்தவர்கள் குறித்து புறணி பேசுவதில்லை என தேஜாஸ்ரீ குறித்து ஏகப்பட்ட பாசிட்டிவ் பாயிண்டுகளை அடுக்குகிறார்கள் கோலிவுட்காரர்கள்.

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பது போல, பாலுமகேந்திராவே தேஜாஸ்ரீயை புகழ்ந்து தள்ளுகிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு இப்படி ஒரு நல்ல நடிகையை இப்போதுதான்பார்க்கிறேன். நல்லா நடிப்பு வருகிறது,டான்ஸும் கலக்கியெடுக்கிறார். சில்க் ஸ்மிதாவைப் போல இவர் உருவாவார் என்று நினைக்கிறேன். எனது அது ஒரு கனாக்காலம் படத்தில் இவர்சில்க்கைப் போலவே அட்டகாசமான ஒரு டான்ஸ் போட்டிருக்கிறார் என்று புகழாரம் சூட்டுகிறார் பாலு.

"பந்தா"வுக்குப் பிறந்த பல நடிகைகள் கோலிவுட்டை குட்டிச் சுவராக்கி வரும் நேரத்தில், தேஜாஸ்ரீ போன்ற நடிகைகள் நல்ல பொண்ணு என்ற பெயர் வாங்குவதில்ஆச்சரியம் இல்லைதான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil