»   »  தமிழ் இயக்குனர்களுக்கு தெலுங்கு வலை!

தமிழ் இயக்குனர்களுக்கு தெலுங்கு வலை!

Subscribe to Oneindia Tamil

முன்னணி நடிகர்களின் தெலுங்கு படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவருவதால் தமிழ் இயக்குனர்களுக்கு அங்கு வலை வீசப்பட்டு வருகிறது.

தெலுங்குத் திரையுலகின் மண்ணின் மைந்தர்கள் இயக்கிய பல படங்கள் பெரும்தோல்வியை சந்தித்து வருகின்றன. மெகா ஸ்டார்கள் நடிக்க, பிரபல தெலுங்குஇயக்குனர்களின் படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில்தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர்களின் படங்கள் அமோக வெற்றியைப்பெற்றிருப்பது அங்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணவம்சி, தெலுங்கில் பிரபலமான இயக்குநர். முன்னணி ஹீரோக்களை வைத்துபல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள அவரது இயக்கத்தில் வெளியான ராக்கி,அம்மா ராஜசேகர் இயக்கிய கதர்நாக், விவிவி நாயக் இயக்கிய யோகி ஆகிய படங்கள்அடுத்தடுத்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளன.

இதில் யோகி, கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ஜோகி படத்தின்ரீமேக். இப்படம் தமிழில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்ற பெய>ல் தனுஷ்நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதேபோல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அன்னாவரம் (அசின் நடித்தது), தேசமுதுருஆகிய படங்களும் தோல்வி அடைந்துள்ளன. அதேசமயம், தமிழ்ப் படங்களின்ரீமேக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநர்களின் நேரடி தெலுங்குப் படங்களும்செம வசூலைக் காட்டியுள்ளன.

கஜினி, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் டப் செய்யப்பட்டு தெலுங்கில்பெரும் வசூலை வாரிக் குவித்தன. இதேபோல ஏ.ஆர்.முருகதாஸ், பி.வாசு, பாஸ்கர்ஆகிய தமிழ்நாட்டு இயக்குநர்கள் நேரடியாக தெலுங்கில் இயக்கிய படங்களும்வசூலை அள்ளிக் கொட்டியுள்ளன.

முருகதாஸ் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய ஸ்டாலின், பாஸ்கர் இயக்கிய பொம்மரிலுஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனைபடைத்துள்ளன.

இதையடுத்து தமிழ்நாட்டு இயக்குநர்கள் பக்கம் தெலுங்கு தயாரிப்பாளர்களின்கவனம் திரும்பியுள்ளது.

நேரடித் தெலுங்குப் படங்களை இயக்க தமிழ் இளம் இயக்குநர்களுக்கு அழைப்புகள்குவிந்து வருகின்றன.

முருகதாஸ், செல்வராகவன், ஹரி, குணசேகர், பாஸ்கர் ஆகியோருக்கு அடுத்தடுத்துபுதிய படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல பிரபு தேவா, லாரன்ஸ் ராகவேந்திரா ஆகியோருக்கும் தெலுங்குப்படங்களை இயக்க வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இருவரும் தெலுங்கில் தலா இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்கள். சிரஞ்சீவிநடிக்கவுள்ள சங்கர்தாதா ஜிந்தாபாத் என்ற படத்தை பிரபு தேவா இயக்கவுள்ளார். இதுலகே ரஹோ முன்னாபாய் படத்தின் ரீமேக் ஆகும்.

இதேபோல நாகார்ஜூனா நடிக்க டான் என்ற படத்தை லாரன்ஸ் இயக்கவுள்ளார்.

பிரபு தேவா தமிழில் முதல் முறையாக இயக்கியுள்ள போக்கிரி சூப்பர் ஹிட்படமாகியுள்ளதால் சந்தோஷமாக இருக்கிறார். அவருக்குப் புதிதாக இந்திப் படவாய்ப்பும் கிடைத்துள்ளது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளபடத்தை இயக்கப் போகிறார் பிரபு தேவா.

இதில் சல்மான் கான் தான் ஹீரோ நடிக்கிறார். சிரஞ்சாவியின் சங்கர்தாதா ஜிந்தாபாத்படத்தை முடித்து விட்டு போனி படத்தை போணி பண்ணப் போகிறார் பிரபு தேவா.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil