தெனாலி "அலங்காட்டி மழை" குழந்தை குரல் இவங்களோடதா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
சென்னை: நம்மவர் படத்தில் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானவர் ஸ்ரீனிவாஸ்.
கிட்டத்தட்ட 3000 பாடல்களுக்கு மேல் இவர் பாடியுள்ளார். பாம்பே, மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, நேருக்கு நேர், ரட்சகன் போன்ற பல ஹிட் படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
பல முன்னணி ஹீரோக்களுக்கு இவரது குரல் ஒலித்துள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

பல நடிகர்களுக்கு பின்னணி குரல்
படையப்பா படத்தில் மின்சார பூவே,ஜோடி படத்தில் ஒரு பொய்யாவது சொல் கண்ணே, அலைபாயுதே படத்தில் சிநேகிதனே, பத்ரி படத்தில் காதல் சொல்வது உதடுகள் அல்ல, பஞ்சதந்திரம் படத்தில் வை ராஜா வை, போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஸ்ரீனிவாஸ். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பலமொழிகளிலும் பாடகர் ஸ்ரீனிவாஸ் முன்னணியில் உள்ளார்.இந்நிலையில் பாடகர் ஸ்ரீனிவாசின் மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பைப் பற்றி கூறியுள்ளார்.

புலிக்கு பொறந்தது பூனையாகுமா?
புலிக்கு பொறந்தது பூனையாகுமா? என்று ஒரு பழமொழி உண்டு .அதுபோல் ஸ்ரீனிவாஸ் எந்த அளவிற்கு ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளாரோ அதேபோல் மழலை குரலில் முதல் பாட்டிலேயே பலரின் மனதை வென்றவர் தான் சரண்யா ஸ்ரீனிவாஸ். 2000 ஆம் ஆண்டு கமலஹாசன், ஜெயராம், தேவயானி, ஜோதிகா போன்ற பலரும் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் தெனாலி. இப்படத்தை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். கிரேசி மோகனின் வசனங்களில் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

2 வரிகள்
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஆலங்கட்டி மழை என்ற பாடலை எழுதியவர் கலைக்குமார். இந்த பாடலை கமலஹாசன், ஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன் போன்றவர்கள் பாடியுள்ளனர். இந்த பாடல் ஆரம்பத்தில் ஒரு குழந்தை குரலில் தொடங்கும் அந்த குரலுக்கு சொந்தமானவர் தான் சரண்யா ஸ்ரீனிவாஸ். இந்த பாடலை ஸ்ரீனிவாஸ் பாடும் பொழுது, ஒரு இரண்டு வரிகள் குழந்தை பாடுவது போல இருக்கு அதற்கு உன் மகளை பாட வைக்கலாமா என்று கேட்டுள்ளனர். உடனே சரி என்று சொன்ன சீனிவாஸ் அந்த பாடலை தனது மகள் சரண்யாவை பாட வைத்துள்ளார்.

பயம் தெரியாது
ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இப்பாடலை பாடியுள்ளார் பாடகி சரண்யா ஸ்ரீனிவாஸ். இது குறித்து அவர் கூறுகையில். அந்த பாடல் பாட ரெக்கார்டிங் தியேட்டருக்கு போகும் பொழுது எனக்கு ஒரு துளி பயம் கூட இல்லை, சாதாரணமாக சென்று பாடி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன், ஆனால் இப்பொழுது ஒவ்வொரு பாடலை பாடும் பொழுதும் கவனமாக இருக்கிறேன், சரியாக பாட வேண்டாம் என்ற பயம் எனக்குள் இருக்கிறது. ஆனால் அந்த சின்ன வயதில் எனக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல் பாடி கொடுத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார் சரண்யா ஸ்ரீனிவாஸ்.


Click it and Unblock the Notifications











