தளபதி ரசிகனின் ரசிகன்" பர்த்டே ட்ரீட் சாங்.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்!

சென்னை : தளபதி விஜயின் பிறந்தநாள் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு பரிசாக ஒரு பாடலை இயக்கி வெளியிட்டுள்ளனர்.

Recommended Video

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் விஜயின் அடுத்த படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் அவரது டான்சர்கள் அனைவரும் இணைந்து கலக்கும் தளபதி ரசிகனின் ரசிகன் பாடல் தற்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த பாடலை நடிகர்களாகவும் விஜய்யின் தீவிர ரசிகர்களாகவும் இருக்கின்ற தமிழ் திரைப் பிரபலங்கள் பலரும் அவர்களது சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தனது இயல்பான நடிப்பாலும் அழகான எக்ஸ்பிரஷினாலும் பல கோடி ரசிகர்களை உலகெங்கிலும் கொண்டுள்ளார். இந்நிலையில் இவரின் கடைசி படமான பிகில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்

விரைவில்

விரைவில்

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வரும் வேளையில், இதன் படப்பிடிப்புகள் மொத்தமும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இதன் போஸ்ட் புரொடக்சன் ஒர்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த படம் கூடிய விரைவிலேயே திரையில் வெளியிட இருக்கும் நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் உடன் விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா என பல முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடித்து வருகின்றனர். மேலும் இதற்கு அனிருத் இசை அமைத்து இருக்கின்ற வேளையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கொண்டாட்டங்கள்

கொண்டாட்டங்கள்

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க தற்போது விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கி பல தமிழ் நடிகர்களால் காமன் டிபி வெளியிடப்பட்டது. இப்போது நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் மற்றும் அவரது ரசிகர்கள் இணைந்து ஒரு பாடலையும் விஜய்யின் பிறந்தநாளுக்காக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

மாஸான பாடல்

மாஸான பாடல்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருகின்ற நிலையில், அவரது ரசிகர்கள் இப்போதிலிருந்தே உலகமெங்கும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வேளையில் அவரது ரசிகர்கள் அனைவரும் இணைந்து "தளபதி ரசிகனின் ரசிகன்" பர்த்டே ட்ரீட் என்ற மாஸான ஒரு பாடலை உருவாக்கி அதற்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைத்தும் உள்ளார். இந்த பாடல் இப்பொழுது இணையத்தில் மாஸ் காட்டி வருகிறது.

சுவாரசியமான வசனங்கள்

சுவாரசியமான வசனங்கள்

விஜயின் ரசிகர்கள் மட்டுமே முற்றிலும் உருவாக்கியிருக்கும் "தளபதி ரசிகனின் ரசிகன்" பாடல் செம்ம தெறியாக தயாராகியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் முழுக்க முழுக்க எழுதியிருக்கும் இந்த பாடலில் இயக்குனர் அட்லி பிகில் ஆடியோ லான்ச்சில் பேசிய சில சுவாரசியமான வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

சாதனை

சாதனை

இந்த பாடல் சில மணி நேரத்திற்கு முன்பு திரைத்துறையில் நடிகர்களாகவும் விஜய்யின் நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கின்ற ஸ்ரீதர் மாஸ்டர், ரோபோ சங்கர், அதுல்யா ரவி, ஸ்ரீமான் போன்றவர்களால் அவர்களது சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட சில மணி நிமிடங்களிலேயே இந்த பாடல் பலராலும் பார்க்கப்பட்டு வியூவ்ஸ் மற்றும் லைக்குகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X