தங்கர் படத்தில் சேரன், எஸ்.ஜே. சூர்யா தங்கர்பச்சானின் அடுத்த படமான பள்ளிக்கூடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சேரன், எஸ்.ஜே.சூர்யாஆகியோர், தங்கருடன் இணைந்து நடிக்கிறார்கள். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியை வெளியிட்டார் தங்கர். எதிர்பாராத அளவுக்கு அந்தப் படம்வெற்றிப் படமாக மாறியது. தங்கர் மற்றும் அவருக்கு நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்த நவ்யா நாயர் ஆகியோரின் நடிப்புபேசப்பட்டது. இந்த வெற்றியால் மகிழ்ந்து போன தங்கர் அடுத்த படத்திற்கான அடிக்கல்லை நாட்டி படு வேகமாக கதையை உருவாக்கிவிட்டார். தங்கர் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகப் போகும் அடுத்த படத்தின் பெயர் பள்ளிக்கூடம். இதுவும் மலையாளப்படத்தின் ரீமேக்தான். ஆனால் தமிழுக்கேற்ப கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் தங்கர். கரூருக்கு அருகே உள்ள ஒரு குக்கிராமத்திற்குச் சென்று, எந்தவித இடையூறும் இல்லாமல் கதையை செதுக்கி வந்துள்ளார் தங்கர்.இப்படம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படவுள்ளதாம். 3 நண்பர்களின் கதை தான் பள்ளிக்கூடம். தங்கர் ஒரு நண்பராக வருகிறார். அவரது இரு நண்பர்களாக இயக்குநர்கள் சேரன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இவர்களுக்கான நாயகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்தை தங்கரே இயக்குகிறார். ஜனவரியில் இப்படத்தைத் தொடங்குகிறார்கள். தங்கர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பொருட்செலவில்உருவாகப் போகும் படம் என்பதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா தயக்கம் காட்டினாராம். ஆனால் தங்கர் விடவில்லை. அவரும், சேரனுமாக சேர்ந்துபோய் சூர்யாவைப் பார்த்து கதையைக் கூறி வலியுறுத்தியுள்ளனர்.அதன் பிறகே சூர்யா ஓ.கே.சொன்னாராம். இந்தப் படம் குறித்து தங்கர் கூறுகையில், ஆங்கிலத்தில் வெளியான டைட்டானிக் போல, இந்தியில் வெளியான ஷோலே போல,எனது பள்ளிக்கூடம் காலம் கடந்து நிற்கும் சரித்திரப்படமாக அமையும் என்றார். பெரும் பொருட்செலவு, 3 முன்னணி இயக்குநர்கள் ஹீரோக்கள், 3 ஹீரோயின்கள், வித்தியாசமான கதையமைப்பு என பல்வேறுகலவையுடன் உருவாகவுள்ள பள்ளிக்கூடம், நிச்சயம் வித்தியாசமான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

By Staff

தங்கர்பச்சானின் அடுத்த படமான பள்ளிக்கூடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான சேரன், எஸ்.ஜே.சூர்யாஆகியோர், தங்கருடன் இணைந்து நடிக்கிறார்கள்.

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியை வெளியிட்டார் தங்கர். எதிர்பாராத அளவுக்கு அந்தப் படம்வெற்றிப் படமாக மாறியது. தங்கர் மற்றும் அவருக்கு நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்த நவ்யா நாயர் ஆகியோரின் நடிப்புபேசப்பட்டது.

இந்த வெற்றியால் மகிழ்ந்து போன தங்கர் அடுத்த படத்திற்கான அடிக்கல்லை நாட்டி படு வேகமாக கதையை உருவாக்கிவிட்டார். தங்கர் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகப் போகும் அடுத்த படத்தின் பெயர் பள்ளிக்கூடம். இதுவும் மலையாளப்படத்தின் ரீமேக்தான். ஆனால் தமிழுக்கேற்ப கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார் தங்கர்.


கரூருக்கு அருகே உள்ள ஒரு குக்கிராமத்திற்குச் சென்று, எந்தவித இடையூறும் இல்லாமல் கதையை செதுக்கி வந்துள்ளார் தங்கர்.இப்படம் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்படவுள்ளதாம். 3 நண்பர்களின் கதை தான் பள்ளிக்கூடம்.

தங்கர் ஒரு நண்பராக வருகிறார். அவரது இரு நண்பர்களாக இயக்குநர்கள் சேரன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.இவர்களுக்கான நாயகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. படத்தை தங்கரே இயக்குகிறார்.

ஜனவரியில் இப்படத்தைத் தொடங்குகிறார்கள். தங்கர் இதுவரை இயக்கிய படங்களிலேயே இதுதான் அதிக பொருட்செலவில்உருவாகப் போகும் படம் என்பதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


முதலில் இப்படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா தயக்கம் காட்டினாராம். ஆனால் தங்கர் விடவில்லை. அவரும், சேரனுமாக சேர்ந்துபோய் சூர்யாவைப் பார்த்து கதையைக் கூறி வலியுறுத்தியுள்ளனர்.அதன் பிறகே சூர்யா ஓ.கே.சொன்னாராம்.

இந்தப் படம் குறித்து தங்கர் கூறுகையில், ஆங்கிலத்தில் வெளியான டைட்டானிக் போல, இந்தியில் வெளியான ஷோலே போல,எனது பள்ளிக்கூடம் காலம் கடந்து நிற்கும் சரித்திரப்படமாக அமையும் என்றார்.

பெரும் பொருட்செலவு, 3 முன்னணி இயக்குநர்கள் ஹீரோக்கள், 3 ஹீரோயின்கள், வித்தியாசமான கதையமைப்பு என பல்வேறுகலவையுடன் உருவாகவுள்ள பள்ளிக்கூடம், நிச்சயம் வித்தியாசமான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X