அந்த சிரிப்பு என்னோடது இல்ல... அப்படி சிரிக்க அவர் தான் காரணம்... இயக்குனர் சசிகுமார்!
சென்னை: இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளவர் சசிகுமார். இப்பொழுது பகைவனுக்கு அருள்வாய்,காரி,காமன் மேன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய சசிகுமார் நான் அப்படி சிரிக்க மாட்டேன் அது அந்த நடிகரின் சிரிப்பு என அவரின் வழக்கமான சிரிப்பு ஸ்டைலில் குறித்து மிகவும் கலகலப்பாகவும் பேசியுள்ளார்

இயக்குனராக அறிமுகமானவர்
தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி சர்வதேச அளவில் விருதுகளை குவித்து இன்றும் பேசப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது சுப்ரமணியபுரம். இயக்குனர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த சசிகுமார் சுப்ரமணியம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும்
70 மற்றும் 80 களில் மதுரையில் நடக்கின்றவாறு கதை களத்தை அமைத்துக் பிரமாதப் படுத்தியிருப்பார் சுப்பிரமணியபுரம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் எந்த படத்தில் நடித்திருப்பார். சுப்ரமணியபுரம் சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்தை தொடர்ந்து சசிகுமார் தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

அவரது சிரிப்பு தான் நினைவிற்கு வரும்
பகைவனுக்கு அருள்வாய், நா நா, காமன் மேன், காரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சசிகுமாரி என்ற சிரிப்பு மிகவும் பிரபலமானது. நாடோடிகள் ரிலீசுக்கு பிறகு ரசிகர்களுக்கு சசிகுமாரின் பெயரைக் கேட்டவுடனேயே கட்டாயமாக அவரது சிரிப்பு தான் நினைவிற்கு வரும் அவ்வளவு பிரபலமானது அந்த சிரிப்பு.

அந்த சிரிப்பு என்னோடது இல்லை
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய சசிகுமார் அந்த சிரிப்பு என்னுடையது இல்லை. வெகுளித்தனமாக அந்த சிரிப்பிற்கு என்றும் ரசிகர்கள் அடிமையாகி உள்ள நிலையில் அந்த சிரிப்பு என்னோடது இல்லை என சசிகுமார் பேசியுள்ளார். நாடோடிகள் படத்தில் உடனடி போஸ்டர் ஒட்டும் அரசியல்வாதியாக நடித்துள்ளவரின் சிரிப்பு தான் அது.

அப்படி சிரிக்க அவர் தான் காரணம்
நாடோடிகள் படத்தில் நடிக்கும்போது சிரிப்பு எனக்கு வரவே இல்லை அப்பொழுது அவர் சொல்லி கொடுத்து தான் அந்த சிரிப்பு.. இப்போ வரைக்கும் எல்லாரும் என்னோட சிரிப்புனு நெனச்சிட்டு இருகாங்க நானும் அப்டியே விட்டுட்டேன் என அந்த நேர்காணலில் நடிகர் சசிகுமார் நீண்ட வருடங்களாக இருந்த சிரிப்பு சர்ச்சை குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











