என்னை அடிக்கச் சொல்வார் கேப்டன்... விஜயகாந்தை புகழ்ந்து தள்ளிய சரத் குமார்
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் சமயங்களில் நடிகர் விஜயகாந்தை பற்றி அவதூறான கருத்துக்களும் மீம்ஸ்களும் வருவது வழக்கமாக இருந்தது.
Recommended Video
சமூக வலைத்தளங்கள் மூலமாகவே அவர் நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
ஆனால் இன்று அதே சமூக வலைத்தளம் மூலமாக விஜயகாந்தின் புகழை சினிமா துறையைச் சேர்ந்த பலரும் கூறிய வண்ணம் இருக்கிறார்கள்.

சரத் குமார்
அந்த வகையில் அவருடன் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் விஜயகாந்த் பற்றி நிறைய விஷயங்கள் கூறியுள்ளார். சினிமாவில் தனக்கு வாழ்வு கொடுத்தவர் விஜயகாந்த் என்றும் தயாரிப்பாளராக பணத்தை இழந்த நிலையில், புலன்விசாரணை திரைப்படத்தில் நடிக்க சொல்லி விஜயகாந்த் அறிவுறுத்தி இருக்கிறார்.

டப்பிங்
டப்பிங் முடிந்து படம் பார்த்த விஜயகாந்த் சரத்குமாரை அழைத்து இந்தப் படத்தில் என்னை விட உனக்கு தான் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொன்னாராம். பொதுவாக தன்னை விட இன்னொரு நடிகருக்கு காட்சிகளோ முக்கியத்துவமோ அதிகமாக இருந்தால் இயக்குநரிடம்,"என்னை விட அந்த நடிகருக்கு ஏன் அதிக காட்சிகள் வைத்திருக்கிறாய். அதனை நீக்கிவிடு" என்று தான் கதாநாயகர்கள் சொல்வார்கள். ஆனால் எனக்கு நல்ல பேர் கிடைக்கும் என்று விஜயகாந்த் பாராட்டினார் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

பெருந்தன்மை
அதேபோல ஒரு பெரிய இயக்குனர் விஜயகாந்திடம் ஒரு கதையை கூறியபோது விஜயகாந்த் உடனே சரத்குமாருக்கு ஃபோன் போட்டு,"சரத் என்னை விட இந்தப் படம் உங்களுக்கு நன்றாக இருக்கும் நீங்கள் அடியுங்கள்" என்று சொன்னாராம். சினிமாவில் எந்த ஒரு நடிகரும் இன்னொரு நடிகருக்கு வாய்ப்பை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் விஜயகாந்த் அதைச் செய்தார். அரசியலில் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் என்றுமே நாங்கள் நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

சண்டைக் காட்சி
ஒருமுறை புலன் விசாரணை படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்தபோது விஜயகாந்த் அதிக அடி வாங்குவது போல் ஸ்டண்ட் அமைத்திருந்ததாம். அப்போது, ஒரு கதாநாயகன் இவ்வளவு அடி வாங்கக் கூடாது என்று சரக்குமார் சொல்ல, இல்லை நீங்கள் என்னை அடியுங்கள். அதிகமாக அடிக்க அடிக்க நான் திரும்பி அடிக்கும்போது தான் சுவாரஸ்யம் ஏற்படும் என்று விஜயகாந்த் கூறினாராம். இதுவும் மற்ற நடிகர்கள் செய்யாத ஒன்றாம். தானே அனைவரையும் அடிப்பது போலத்தான் காட்சிகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்களாம் நடிகர்கள். ஆனால் வில்லன்களும் தன்னை அடித்து அதன் பிறகு தான் அடிக்க வேண்டும் என்றுதான் விஜயகாந்த் விரும்புவார் என்று சரத்குமார் அந்த நிகழ்வில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











