பாம்பின் மேனரிஸத்தை கற்றுக் கொடுத்து என்னிடம் நடிப்பு வாங்கிய இயக்குநர்... சூர்யா பெருமிதம்
சென்னை: நடிகர் சூர்யா தற்சமயம் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தான் தயாரித்திருந்த சூரரைப் போற்று திரைப்படத்தை ஹிந்தியில் மீண்டும் அக்க்ஷய் குமாரை வைத்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தனது கேரியரில் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் சூர்யா.

காக்க காக்க
காக்க காக்க திரைப்படத்தின் ஸ்கிரிப்டை சூர்யா படித்தபோது அதில் முதல் காட்சியில் கதாநாயகன் ஒரு வீட்டை உடைத்துக் கொண்டு தண்ணீரில் விழுவது போல எழுதப்பட்டிருந்த காட்சியை படித்தவுடன் அதில் நான்தான் நடிப்பேன் என்று கௌதமிடம் கூறிவிட்டாராம். படப்பிடிப்பு நடந்த அன்று, தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றபோது அங்கு ஏற்கனவே அந்தக் காட்சியை படம் பிடித்துக் கொண்டிருந்தார்களாம். உடனே வேக வேகமாக சென்று நான்தான் நடிப்பேன் என்று கூறினேனே ஏன் டூப்பை வைத்து எடுக்கிறீர்கள் என்று கேட்க, லாங் ஷாட் மட்டும்தான் எடுக்கிறோம். குளோஸ் அப் ஷாட்டில் நீங்கள் நடியுங்கள் என்று பீட்டர் ஹெயின் மாஸ்டர் கூறினாராம்.

அஞ்சு வாட்டி எடுத்தான் பீட்டரு
சூர்யா அந்தக் காட்சியில் நடிக்கப் போகிறேன் என்று சொல்லும் போது ஜோதிகா வேண்டவே வேண்டாம் என்று மறுத்தாராம். அதையும் மீறிதான் அதில் நடித்தாராம். ஒரே டேக்கில் ஓகே ஆகிவிடும் என்று பார்த்தால் 5 வாட்டி எடுத்தான் பீட்டரு என்று ஒரு நிகழ்ச்சியில் பீட்டர் ஹெயின் மாஸ்டரை கை காட்டி வேடிக்கையாக கூறியிருக்கிறார்.

நந்தா
சூர்யாவின் கரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது நந்தா தான். அதுவரை சூர்யாவிற்கு நடிக்க வரவில்லை, நடனமாட வரவில்லை என்று பல விமர்சனங்களை பத்திரிகைகள் எழுதி வந்தன. அந்தச் சூழ்நிலையில் முதன் முதலில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் என்று அவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் நந்தா.

பாம்பின் மேனரிசம்
அந்தப் படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி வரும். கல்லூரியில் ஒரு பெண்ணிற்கு முத்தம் கொடுக்கச் சொல்லி ரவுடி ஒருவன் அனைத்து மாணவர்களையும் வற்புறுத்துவான். அப்போது நடக்கும் சண்டை காட்சி மிகப் பிரபலமாக பேசப்பட்டது. ஒரு நல்ல பாம்பின் மேனரிசத்தை உள்வாங்கி நடியுங்கள். தலையை ஒரு சிலிர்ப்பு சிலிப்பி பாம்பு கொத்துவது போல் உங்கள் தலையால் அவனை அடிக்க வேண்டும் என்று பாலா சொல்ல அதனை ஸ்டண்ட் இயக்குநர் கோரியோகிராஃப் செய்து சூர்யாவை நடிக்க வைத்திருப்பார். அதனால் நந்தா மற்றும் காக்க காக்க தனது கரியரில் சண்டை காட்சிகள் சிறப்பாக அமைந்த இரண்டு திரைப்படங்கள் என்று சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











