காமெடி நடிகர்களின் கண்ணீர் கதை: கொடுமைப்படுத்திய சித்தி.. கோவில் வாசலில் நின்ற நடிகர் தங்கவேலு!
சென்னை: பழம்பெரும் நடிகரான தங்கவேலு 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ந் தேதி பிறந்தார். இவருடைய துணைவியார் எம்.சரோஜா, இவருடன் சேர்ந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இவர் சிவாஜி கணேசன், பத்மினியுடன் சேர்ந்து நடித்த தில்லானா மோகனாம்மாள் இவரை மேம்மேலும் புகழடைய வைத்தது. தனது தனித்துவமான நகைச்சுவையால், மக்களை சிரிக்க வைத்த தங்கவேலுவின் வாழ்க்கை கண்ணீரால் உருவானதுதான்.
"அலிபாபாவும் நாற்பது திருடர்களும்" திரைப்படத்தில் ' சோனா நான் போனா.. திரும்பி வருவேனா" என இவர் செய்த சேட்டையை யாராலும் மறக்க முடியாது. டணால் தங்கவேலு என சினிமாத்துறை இவரை கொண்டாடியது. இவர் 1958 ஆம் ஆண்டு தன்னுடன் 50 திரைப்படத்தில் நடித்த என்.சரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இரண்டு பேரும் சேர்ந்து திரைப்படங்களில் நடித்தார்கள். ரெண்டு பேருமே நகைச்சுவையை பிரதானமாக எடுத்து நடித்ததால், இவங்களுடைய ஜோடி ரொம்ப பரவலாக பேசப்பட்டது. கவுண்டமணி, செந்தில் ஜோடி போல, அந்த காலத்தில் இவர்களுடைய ஜோடி பலரிடம் பாராட்டை பெற்றது. முக்கியமாக கல்யாண பரிசு திரைப்படத்தில் இவங்க ரெண்டு பேருடைய காமெடி பலரால் பேசப்பட்டு புகழையும் அடைய வைத்தது. இவருடைய சொந்த ஊர் காரைக்கால், அப்பாவின் பெயர் அருணாச்சலம், அதை அப்படியே சுருக்கி கே.ஏ. தங்கவேலு என மாற்றிக்கெண்டார்.

சித்தி கொடுமை: தங்கவேலுவின் அப்பா அருணாச்சலம் தங்க நகைகளை செய்யும் பொற்கொல்லராக இருந்தார். இவர் பிழைப்பைத்தேடி திருமலையடியான் பட்டினம் வந்து, பின் நாளில் அங்கே குடும்பத்துடன் குடியேறிவிட்டார். தங்கவேலின் அப்பா குடிப்பழக்கத்திற்கு அடியாக இருந்ததால், ஒருவேலை சாப்பாட்டுகே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார் தங்கவேல். இந்த இக்கட்டான நேரத்தில், நடிகர் தங்கவேலுவிற்கு ஆறு வயது இருக்கும் போது, அம்மா இறந்துவிட, தங்கவேலுவின் அப்பா அருணாச்சலம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த பிஞ்சு வயதிலேயே சித்தியால் பல கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார் நடிகர் தங்கவேலு. இவருக்கு நகைச்சுவை மீது மட்டுமல்லாமல் இசையின் மீதும் அதிக ஆர்வம் உண்டு. எங்காவது பாடல் ஒலித்தால் அங்கேயே நின்று கொண்டு அந்த பாடலை அப்படியே பாடி முணுமுணுப்பது இவரின் பழக்கமாம். அதே போல, எங்கே நாடகம்நடந்தாலும் அங்கு சென்று நாடகத்தை பார்த்துவிடுவாராம். இதற்காக சித்தியிடம் பல அடிகளையும் வாங்கி இருக்கிறார் நடிகர் தங்கவேலு.
நடிகரானார்: ஒரு கட்டத்திற்கு மேல் சித்தியின் கொடுமையில் இருந்து விடுபட முடிவு செய்த தங்கவேலு, வீட்டை விட்டு ஓடிவந்து ராஜாம்மாள் என்கிற நாடக கம்பேனியில் சேர்ந்து, தனது ஆசைப்படி பல நாடகங்களில் நடித்தார். இதில் எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, கந்தசாமி முதலியார் இவர்கள் இரண்டு பேரும் தங்கவேலுக்கு நடிக்க கற்று கொடுத்துள்ளார்கள். இவர்களின் உதவியால் தங்கவேலு அதே கம்பேனியில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் பணியாற்றினார். கந்தசாமி முதலியார் படம் எடுக்க தொடங்கியது. அவர் எடுத்த பல படத்தில் தங்கவேல் நடித்தார். 1936ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். இவர் நடித்த முதல் திரைப்படமே எம்ஜிஆர் கூட நடித்து இருந்தாலும், அதன் பின் இவர் நடித்த படங்களில் இவருக்கு சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தது.
பட வாய்ப்பு இல்லாதால் சென்னையில் பசியோடு தவித்த வந்த தங்கவேலு, காஞ்சிபுரத்தில் முருகன் கோயிலில் தங்கி யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது நிலையை கண்ட மாரப்பா என்ற நடிகர் தங்கவேலுவை சென்னைக்கு அழைத்து வாய்ப்பு கொடுத்தார். இந்த நேரத்தில் தான் நடிகர் தங்கவேலு, என்.எஸ். கிருஷ்ணனை சந்தித்து வாய்ப்பு கேட்டார். தங்கவேலுவின் மேடை நாடகத்தை பார்த்து வியந்த , கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் மணமகள் திரைப்படத்தில் தங்கவேலுவை நடிக்கவைத்தார். அதன் பின் தான் தங்கவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறினார்.


Click it and Unblock the Notifications











