»   »  ரஜினி - கமல் திடீர் சந்திப்பு!br/இணைந்து நடிக்க திட்டம்?

ரஜினி - கமல் திடீர் சந்திப்பு!br/இணைந்து நடிக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும், கலைஞானி கமல்ஹாசன் திடீர் என சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளையும், பல்வேறு யூகங்களையும் எழுப்பியுள்ளது. இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும் கூற்பபடுகிறது.

ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் முதலில் இந்த சந்திப்பு நடந்தது. ரஜினியும், கமலும் அங்கு நெடுநேரம் பேசியுள்ளனர். பின்னர் கமலும், ரஜினியும் சேர்ந்து மதிய உணவையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

அதன் பின்னர் அடுத்த நாள் ரஜினியை தனது நீலாங்கரை வீட்டுக்கு கமல் அழைத்துள்ளார். ரஜினியும் அங்கு சென்று கமலுடன் மதிய உணவு அருந்தினார். அன்று இரவு 11 மணி வரை இருவரும் நீண்ட நெடிய விவாதத்தை நடத்தியுள்ளனர்.

இருவரும் ஒரு கதை குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. அந்தக் கதையின் நாயகனாக ரஜினி நடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் அரை மணி நேரம்தான் வருவார் என்று தெரிகிறது. ஆனால் அவரது கேரக்டர் படு திருப்புமுனையான கேரக்டராம்.

இது இரு நண்பர்களின் கதை. இருவரும் ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்டவர்களாம். இந்தக் கதையை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கக் கூடும் எனவும் தெரிகிறது. இதுதொடர்பாகத்தான் இரு இமயங்களும் சந்தித்து இரண்டு நாட்களாக டிஸ்கஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் இணைந்து நடித்தால் அது தமிழ்த் திரையுலகின் ரெக்கார்ட் படமாக இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

Read more about: kamal, rajini
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil