நான் ஆணவமாக இருக்க காரணம் ரஜினி சார்... சுந்தர்.சி ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?

சென்னை: இயக்குநர்கள் பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்யராஜ், டி ராஜேந்தர் உள்ளிட்டோரின் டிரெண்டை மாற்றி அமைத்த இயக்குநர்கள் பெரும்பாலும் அறிமுகமானது 1990களில்.

இயக்குநர்கள் சங்கர், கே எஸ் ரவிக்குமார், சுந்தர் சி என்று இன்னும் பல இயக்குநர்களை அந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

அவர்களில் இன்று வரை தொடர்ச்சியாக திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி வெற்றிகளையும் குவித்து கொண்டிருப்பவர் என்றால் அது இயக்குநர் சுந்தர்.சி என்று சொல்லலாம்.

சுந்தர்.சி

சுந்தர்.சி

இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து தான் இயக்குனர் ஆவதற்காக ஒரு கதை எழுதி வைத்திருந்தாராம். ஆனால் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். தனக்கு நகைச்சுவை ஜானர் ஈசியாக வருவதை உணர்ந்தவர் தொடர்ச்சியாக நகைச்சுவை கலந்த குடும்பப்பாங்கான திரைப்படங்களை இயக்கி அதில் வெற்றிகளையும் குவித்தார். அவருடைய கேரியரில் டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா.

குஷ்புவுடன் டேட்டிங்

குஷ்புவுடன் டேட்டிங்

இயக்குனர் ஆவதற்கு முன்பாகவே நடிகை குஷ்பு மீது கிரஷ் இருந்ததாக சுந்தர் சி கூறியுள்ளார். முதல் படத்தில் குஷ்பூ நடித்தவுடன் இருவரும் டேட்டிங்கில் இருந்ததாகவும் குஷ்பூ ஒருமுறை கூறியுள்ளார். அந்த வகையில் உள்ளத்தை அள்ளித்தா படம் முடிவடைந்த பின்னர் இருவரும் ஒரு ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட சென்றிருக்கிறார்கள். அங்கு நடிகர் ரஜினிகாந்த் அவருடைய குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்திருந்தாராம். குஷ்புவுக்கு நல்ல அறிமுகம் என்பதால் அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.

குழம்பிய ரஜினிகாந்த்

குழம்பிய ரஜினிகாந்த்

என்ன படம் இயக்கி இருக்கிறீர்கள் என்று ரஜினி அவரிடம் கேள்வி கேட்க, உள்ளத்தை அள்ளித்தா என்று சுந்தர்.சி பதிலளித்தாரம். அந்தத் தலைப்பு ரஜினி சாரின் வாயில் வரவில்லை என்றும் 'சரி விட்ருங்க' என்று ரஜினி கூறிய அளவில்தான் அவர்களுடைய உரையாடல் முதல் சந்திப்பில் இருந்ததாம். அதன் பின் அடுத்த வருடமே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சி சாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுந்தர்.சி ஆணவம்

சுந்தர்.சி ஆணவம்

படம் பண்ணலாம் என்று இவரை ரஜினி அழைத்த போது, "உங்களிடம் கதை இருக்கிறதா என்று கேட்கவில்லையாம். நான் அடுத்ததாக ஒரு படம் நடிக்க போகிறேன், அதனை நீங்கள் இயக்குகிறீர்களா?" என்று தான் கேட்டாராம். அதிலிருந்து எந்த ஒரு ஹீரோவிற்கும் கதை சொல்லித்தான் கால்ஷீட் வாங்க வேண்டும் என்ற நிலை வந்தால் அந்த படத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாராம் சுந்தர்.சி. ரஜினி சாருடன் நடந்த அந்த சந்திப்புதான், தான் இன்றுவரை கர்வத்துடன் இருப்பதற்கு காரணம் என்று சுந்தர் சி கூறியுள்ளார். அதாவது ரஜினி சாரே, உங்களிடம் கதை இருக்கிறதா நான் உங்களுக்கு படம் இயக்க சான்ஸ் தருகிறேன் என்று சொல்லாமல் என் படத்தை நீங்கள் இயக்குகிறீர்களா என்று கேட்டதால் மற்ற ஹீரோக்களிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்க வேண்டும் என தனக்கு தோன்றியதில்லை என்று சுந்தர் சி பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X