பி.சி.ஸ்ரீராம்-ன் ‘தாடி’க்குப் பின்னால்.... ’சொல்ல மறந்த கதை?’
சென்னை: ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என்றவுடனே டக்கென்று நம் நினைவில் வருவது அவரது தாடியோடு கூடிய முகம் தான். அந்த தாடிக்குப் பின்னால் என்ன கதை உள்ளதென்று சமீபத்தில் மனம் திறந்துள்ளார் பி.சி.
பி.சி. என்று திரைஉலகில் செல்லமாக அழைக்கப் படும் பி.சி.ஸ்ரீராமின் வெற்றிப்படங்கள் எண்ணிடலங்காதவை. மௌனராகங்கள், அக்னிநட்சத்திரம், தேவர்மகன், நாயகன் என அவரது ஒளி வண்ணத்தில் வித்தியாசம் காட்டிய படங்கள் பலப்பல...
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சில ரகசியங்கள் புதைந்து இருக்கும். அந்த வகையில் தன் தாடிக்குப் பின்னால் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா என்பதைப் பற்றி விவரித்துள்ளார் பி.சி. அதில் அவர் கூறியிருப்பதாவது....

சும்மா....
ரகசியம்லாம் ஒண்னுமில்ல. தாடி வளார ஆரம்பிச்சப்ப ஏதோ ஃபீலிங்க்ஸ்ல அப்படியே விட்டுட்டேன்.

கேள்விக்கனைகள்...
சோக சிக்னலா? காதல் தோல்வியா? சாமிக்கு வளர்க்குறியானு ஆளாளுக்கு ஒவ்வொரு காரணத்தை அடுக்கினாங்க. சொந்தக்காரங்க நிறையப் பேர் ‘ஏன் இப்படி இருக்க உடனே ஷேவ் பண்ணுனு திட்டித் தீர்த்தாங்க...

அப்டிதான் வளர்ப்பேன்...
அவங்கள்லாம் எதிர்த்ததாலேயே தாடிஅயை வெச்சுக்கணும்னு முடிவு பண்ணினேன். அப்படி வளர்க்க ஆரம்பிச்சது தான் இந்த தாடி.

தாடியும் ஒரு அங்கம்...
அடர்த்தியா வளர்ந்த பிறகு கண், காது, மூக்கு மாதிரி தாடியும் என் முகத்துல ஒரு அங்கம் ஆகிடுச்சு. இடையில் ரெண்டு மூணி தடவை ஷேவ் பண்ணிப் பார்த்தேன். ஆனா, என் முகத்தைப் பார்க்க எனக்கே பிடிக்கலை. அப்படியே விட்டுட்டேன்' எனத் தெரிவித்துள்ளார் பி.சி.


Click it and Unblock the Notifications











