twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர்கள் நடிக்கும்போது கல்லெடுத்து அடிக்கும் விஜயகாந்த்... பின்னர் சீரியஸாக மாறிய கதை தெரியுமா?

    |

    சென்னை: கேப்டன் என்ற அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் மிகவும் பாசமானவர், உரிமையோடு கோபம் கொள்பவர் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

    ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது தன்னுடன் நடிக்கும் நடிகர்களை வம்பிழுத்து குறும்பும் செய்வாராம்.

    அவ்வாறு விஜயகாந்த் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்ட சம்பவத்தை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

     அம்பத்தூர் சிக்னலில் ஷூட்டிங், அடையாளம் தெரியாத சந்தானம்...காரணங்கள் சொல்லும் இயக்குநர் ரத்னகுமார் அம்பத்தூர் சிக்னலில் ஷூட்டிங், அடையாளம் தெரியாத சந்தானம்...காரணங்கள் சொல்லும் இயக்குநர் ரத்னகுமார்

    சீட்டுக் கட்டு விளையாட்டு

    சீட்டுக் கட்டு விளையாட்டு

    ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் சீட்டு கட்டு விளையாடி அதில் ஜெயிப்பாராம். விசயம் என்னவென்றால், நேர்மையாக ஆடி ஜெயிக்காமல் ஏற்கனவே 13 கார்டுகளை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு அதனை வைத்து ஜெயித்து அதில் வரும் பணத்தில் அனைவருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுப்பார் என்று முன்னதாக நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் தனக்கு பிடித்த உணவை கொடுக்காமல் தன்னை டயட்டில் வைத்திருந்த அம்மாவுக்கு தெரியாமல், தனக்கு வரும் அசைவ உணவுகளை என்னிடம் கொடுப்பார் என நடிகை நளினியும் கூறியுள்ளார்.

    கேமரா ஸ்டாண்ட்

    கேமரா ஸ்டாண்ட்

    தனது ஷாட் முடிந்து விட்டால் உடனே கேரவனுக்கோ அல்லது வேறு எங்கும் செல்ல மாட்டாராம். நடிகர்களுக்காக போடப்படும் சேரில் கூட அமர மாட்டாராம். கேமரா வைப்பதற்காக பயன்படுத்தப்படும் இரண்டு அடி ஸ்டூலில் அமர்ந்து கொண்டு எப்படி படமாக்குகிறார்கள், மாற்றவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று அனைத்தையும் வேடிக்கை பார்ப்பாராம் விஜயகாந்த்.

    கல்லால் அடிப்பாராம்

    கல்லால் அடிப்பாராம்

    அவர் ஸ்டேண்டில் உட்கார்ந்து கொண்டு பிற நடிக்கும் காட்சிகளை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்லாமல் அவர்கள் நடிக்கும் பொழுது ஒரு சிறிய கல்லை எடுத்து அதில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகர் மீது அடிக்கிறேன் என்று சொல்லி குறி வைத்து சரியாக அடிப்பாராம் விஜயகாந்த் பின்னர் கண்டும் காணாதது போல் வேறு எங்கோ திரும்பி ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொள்வாராம். அதேபோல மதிய உணவு இடைவேளை வரும் பொழுது அனைவரும் சாப்பிட்டு விட்டார்களா என்று ஒவ்வொருவரையும் பார்த்துவிட்டுதான் இறுதியாக தான் சாப்பிட அமர்வார் என்றும் சொல்வார்கள்.

    சீரியஸ் கேப்டன்

    சீரியஸ் கேப்டன்

    நடிகராக இருக்கும்போது இப்படி பல குறும்புத் தனங்களை செய்யக் கூடியவராக, தான் பார்த்த விஜயகாந்த் சாரை சீரியஸாகவும் பார்த்துள்ளதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார். நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல்வாதியான பின், தன்னுடைய குறும்புத்தனங்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டு அனைத்து விஷயங்களையும் சீரியசாக அணுகும் நபராக விஜயகாந்த் தன்னைத் தானே மாற்றிக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

    English summary
    The story of Vijayakanth who used to throw stones at actors while they were acting and then turned serious?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X